நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்லூரியில் தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா விழாவில் சிறப்பு விருந்தினராக விண்வெளித்துறை தலைவரும் மற்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி. நாராயணன், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் ஜோ.கே கிழக்கூடன் ஆகியோர் கலந்து கொண்ட நூலை வெளியிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம் மற்றும் கேரளம் மாநிலத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது :
விண்வெளி திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் விண்வெளியில் விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம், ஆள்களை நிலாவுக்கு அனுப்பி திருப்பி வரக்கூடிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை 60-க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு மூன்று அறிவுரைகளை வழங்கினார். அதாவது இந்திய மாணவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் கோட்பாடுகளை படிக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த செயல்திறனுடன் செயல்பட வேண்டும். அதேபோன்று நல்ல மாணவர்களாக வளர வேண்டும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.