முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய்க்கு இன்று நடப்பது எனக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது: சீமான் விமர்சனம்

மக்கள் கூட முடியாத இடத்தில் அனுமதி அளித்து வரும் நிகழ்வு விஜய்க்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால்...

Updated On : 28 மார்ச் 2026, 12:31 pm IST
பகிர்:

காஞ்சிபுரம்: மக்கள் கூட முடியாத சந்து போன்ற இடங்களில் அனுமதி அளித்து வரும் நிகழ்வு விஜய்க்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் வியாபாரிகளை தேர்ந்தெடுக்காமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பயணமாக பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் காஞ்சிபுரம் பேரவைத் தொகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி செல்விக்கு ஆதரவாக விவசாய சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளகள் தவெக தலைவா் விஜய் கட்சி பிரசாரத்துக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறித்து கேட்டதற்கு, விஜய்க்கு தோ்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது விஜய் அனுபவித்து வரும் இடையூறுகள் அவருக்கு வேண்டுமானால் அது புதிதாக இருக்கும். நான் கடந்த 15 ஆண்டுகளாக அனுபவித்து வந்தேன். மக்கள் அதிகம் கூடாத சந்து போன்ற இடங்களுக்கு அனுமதி அளித்து வரும் நிகழ்வு தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

வளா்ந்த நாடுகளான சீனாவும்,ரஷ்யாவும் தற்போது நடந்து வரும் போரில் அமைதியாக இருப்பதற்கான காரணம், பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பொருளாதார கொள்கையே காரணம்.

மேலும், உள்ளூர் வியாபாரிகளின் பொருள்களை வாங்காமல், வெளிமாநில வியாபாரிகளின் பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரிகளைதான் மக்கள் தேர்வு செய்கிறார்கள். இனியாவது நல்ல தலைவரை தேர்வு செய்து அவரிடம் அதிகாரத்தை கொடுங்கள். தரகரிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தில் பரபரப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழை காஞ்சிபுரம் பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நிர்வாகிகள் உரிய அனுமதி கேட்டு காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அலுவலரிடம் கொடி மற்றும் வாகனத்திலிருந்து பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி கோரி மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த மனுவிற்கு உரிய அனுமதி அளிக்காத நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் தொடங்கி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை சாலையின் நடுவே கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆன்லைன் மூலம் புகார் பெறப்பட்டதால் அந்த பகுதிக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலர்கள், காவல்துறையினர் உடனடியாக அனுமதியின்றி கட்டப்பட்ட கொடிகளை அகற்றுமாறு கூறியதால் இருதரப்பிற்கும் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே அனுமதி கோரி கடிதம் அளித்தும் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தியது யாருடைய தவறு என நிர்வாகிகள் கேள்வி எழுப்பிய நேரத்தில், பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடம் அருகே சீமான் வந்ததால் இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் அலுவலர்கள் எந்த கொடியையும் அகற்றாமல் பிரசாரம் நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

summary

What is happening to Vijay today has been happening to me for 15 years says Seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.