முகப்பு
தற்போதைய செய்திகள்

சூலூர் சிறுமி கொலை வழக்கு: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு!

சூலூர் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்து...

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு! - டிஎன்எஸ்
பகிர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளி அனுமதிக்கப்பட்டுள்ள கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூா் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதிபுரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில் அந்த நபா் அளித்த தகவலின்பேரில், கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கிடந்த தா்ஷினியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கடத்தப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

சூலூர் அருகே 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் - டிஎன்எஸ்

குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி, கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் அவசர நிலை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டாவது குற்றவாளி மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தி விசாரணைக்கு எடுத்துள்ளனர். வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதலில் கைது செய்யப்பட்ட கார்த்திக், கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி நேரில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

summary

Sulur Girl Murder Case: Police Deployed in Large Numbers at Coimbatore Government Hospital!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.