லைஃப்ஸ்டைல்

விளையாட்டுகளும் வாழ்க்கைப் பாடம்தான்

விளையாட்டு... கிரிக்கெட்டும் டென்னிஸும் மட்டுமே விளையாட்டு இல்லை. அதையும் தாண்டி, புத்திக் கூர்மைக்கு, மன வலிமைக்கு என எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன.

வாணிஸ்ரீ சிவகுமார்

விளையாட்டு... கிரிக்கெட்டும் டென்னிஸும் மட்டுமே விளையாட்டு இல்லை. அதையும் தாண்டி, புத்திக் கூர்மைக்கு, மன வலிமைக்கு என எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன.

நாம் சிறு வயதில் எத்தனையோ விதமான விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம். அவை யாவும் விளையாட்டு என்றுதான் நினைத்திருப்போம். ஆனால், நாம் நம்முடைய தோழர், தோழிகளுடன் கூடி, ஓடி விளையாடிய அந்த விளையாட்டுக்களை நமது குழந்தைகளால் விளையாட முடியவில்லை (தெரியவில்லை) என்பதை சிலர் பார்த்திருக்கலாம். அப்போதுதான் அவை அனைத்துமே வெறும் விளையாட்டுக்கள் அல்ல; வாழ்க்கைப் பாடம் என்பதை உணர முடிந்தது.

அதாவது, பல்லாங்குழி... ஒவ்வொரு குழிக்குள்ளும் இருக்கும் சோழியை எடுத்து அடுத்தடுத்த குழிகளுக்குள் போட்டு கிடைப்பதை எடுத்துச் செல்வது.. ஒற்றை  சோழியில் ஆட்டத்தை ஆரம்பிப்பவன் அள்ளிச் செல்வதையும், அள்ளியவன் ஒற்றைச் சோழியோடு செல்வதையும் இந்த ஆட்டம் கற்றுக் கொடுக்கும். இது ஒரு தொழில்பாடம்தான்.

எந்த இடத்தில் எடுத்தால், எவ்வளவு கிடைக்கும் என்ற ஒரு அழகான கணக்குப் பாடத்தையும் அல்லவா பல்லாங்குழி நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

பரமபதம்...

ஏணியில் ஏறும் போது சந்தோஷத்தையும் பாம்பில் இறங்கும் போது ஏற்படும் துக்கத்தையும் வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை ஒரே மனநிலையில் அனுபவிக்க பச்சிளம் வயதிலேயே நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் இந்த விளையாட்டு மூலமாக.

இவ்வளவு ஏன்.. சாதாரண திருடன் - போலீஸ் எனப்படும் சீட்டு குலுக்கிப் போட்டு ஆடும் ஆட்டத்தில் கூட.. நம்முடனேயே இருக்கும் திருடனை அவனது முக பாவனை, பேச்சின் மூலம் கண்டுபிடிக்கும் மனோதத்துவத்தைக் கூட மிக அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறது இந்த விளையாட்டுகள்.

நாம் விளையாடிய விளையாட்டுகளில் நினைவிருந்த ஒரு சில விளையாட்டுக்களிலேயே இத்தனை வாழ்க்கைப் பாடம் இருக்கிறதென்றால், இன்னும் எத்தனை எத்தனையோ பழங்கால விளையாட்டுகளைப் பற்றி பார்த்தால் நிச்சயம் நாம் அதிசயித்துப் போவோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தோற்றாலும் வெற்றி பெற்றாலும் ஆனந்தத்தோடு விளையாடி மகிழ்ந்த காலம் கடந்துவிட்டது.

தற்போதைய குழந்தைகளால் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாட விரும்புவதில்லை. அவர்களது வெற்றியும் தோல்வியும் செல்பேசியுடனோ, விடியோகேம்களுடனேயோ அமைந்துவிடுவதால் அவர்களுக்கு எப்படி கிடைக்கப் போகிறது இந்த வாழ்க்கைப் பாடம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT