லைஃப்ஸ்டைல்

காதில் உள்ள நீரை அகற்ற இதை மட்டும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்..! மூளைக்கே பாதிப்பு ஏற்படுமாம்!

காதில் உள்ள நீரை அகற்ற குழந்தைகள் தலையை அசைப்பது அவர்களின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

Muthumari

காதுகளில் உள்ள தண்ணீரை அகற்ற மக்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்று தலையை அசைப்பது. காதுகளில் தண்ணீர் தேங்குவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நீரை அகற்ற வேண்டியது அவசியம். ஆனால், அதற்காக, காதில் உள்ள நீரை அகற்ற குழந்தைகள் தலையை அசைப்பது அவர்களின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இதுதொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காதின் விட்ட அளவு சிறியதாக இருப்பதால் நீரை வெளியேற்றும் போது மூளையின் செயல்பாடு அதிக பங்களிக்கும். இதனால், மூளையின் செயல்திறன் பாதிக்குமாம்.

கண்ணாடி குழாய்கள் மற்றும் 3டி அச்சிடப்பட்ட காது கால்வாய்களில் நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகளின் காதுகளில் உள்ள ஈர்ப்பு விசையானது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது காதில் உள்ள நீரை வெளியேற்ற முடுக்கப்படுகிறது. அப்போது காதில் உள்ள திரவத்தின் மேற்பரப்பு அதிக அதிர்வுடன் காணப்படுகிறது. இதனால், காதில் நீர் இருக்கும் போது தலையை அசைத்தால் மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது. காதின் விட்ட அளவிற்கும் உள்ளே இருக்கும் நீரின் அளவிற்கும் ஏற்ப இது மாறுபடும்.

ஆல்கஹால் அல்லது வினிகர் போன்ற நீரை விட குறைந்த மேற்பரப்பு பதற்றம் கொண்ட ஒரு திரவத்தின் சில துளிகளை காதில் விடுவதன் மூலமாக மேற்பரப்பு பதற்றம் குறைந்து நீர் தானாக வெளியாகி விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT