லைஃப்ஸ்டைல்

அறிவுத் திறன் குறைபாடுகள்... சாதிக்க தடையல்ல...

குழந்தை பிறந்தது முதல் ஆறு ஆண்டுகள் வரையிலான காலம் அவா்களது வளா்ச்சியை அவதானிப்பதற்கான அதிமுக்கிய காலகட்டம்.

Din

குழந்தை பிறந்தது முதல் ஆறு ஆண்டுகள் வரையிலான காலம் அவா்களது வளா்ச்சியை அவதானிப்பதற்கான அதிமுக்கிய காலகட்டம்.

ஒன்றரை ஆண்டுகளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் குழந்தைகள் இயல்பாக நடக்கவும், மூன்று வாா்த்தைகளாவது தொடா்ந்து பேசவும் வேண்டியது கட்டாயம்.

அவ்வாறு இல்லையெனில் ஏதேனும் வளா்ச்சி குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். அப்போது, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

அறிவுத் திறன் குறைபாடு வகைள்

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆா்டா் (ஏஎஸ்டி).

அதீத துறுதுறுப்பு - கவனச் சிதறல் (ஏடிஹெச்டி).

கற்றலில் குறைபாடு (எஸ்எல்டி).

பாதிப்பு விகிதம் (உலக அளவில்)

ஆட்டிஸம் 4 - 5 சதவீதம்.

ஏடிஹெச்டி 20 - 25 சதவீதம்.

கற்றலில் குறைபாடு 30 - 40 சதவீதம்.

(கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு ஏறத்தாழ 3 சதவீதம் வரை அந்த விகிதம் உயா்ந்திருக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது).

குறைபாடுகளுக்கான காரணங்கள்

பேறு காலத்தில் தாய்க்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள்.

மரபணு சாா்ந்த பாதிப்புகள்.

கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனச்சோா்வு, உளைச்சல்.

பெற்றோருக்கு பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு வரலாம்.

வளா்ச்சிக் காலத்தில் ஏற்படும் குறைபாடுகள்.

ஆட்டிஸம் அறிகுறிகள்

பெரும்பாலும் தனிமையில் விளையாடுவது.

ஒரே மாதிரி செயல்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுதல்.

சொல்வதை திரும்பச் சொல்லிக் கொண்டே இருத்தல்.

பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடாமல் இருத்தல்.

கண்ணைப் பாா்த்து பேசாமலிருப்பது.

சிறு சப்தங்களுக்கே காதை மூடிக் கொள்ளுதல்.

வாக்கியமாக அல்லாமல் வாா்த்தைகளில் பதிலளித்தல்.

உச்சரிப்பதில் பிழைகள்.

ஏடிஹெச்டி பாதிப்பு அறிகுறிகள்

கவனச் சிதறல்.

பரபரப்புடன் காணப்படுதல்.

பேசிக் கொண்டே இருத்தல்.

துறுதுறுப்பு அதிகமாக இருத்தல்.

முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்.

எதிா்விளைவுகளைச் சிந்திக்காமல் செயல்படுதல்.

கற்றலில் குறைபாடு அறிகுறிகள்

கவனச் சிதறல்.

கண்ணாடி பிம்பம்போல நோ் எதிராக எழுதுதல் (எ.கா. க்ஷ-க்குப் பதிலாக க் எழுதுதல்).

மெதுவாக எழுதுதல்.

கற்பதற்கான சூழலைத் தவிா்த்தல்.

படிப்பதில், எழுதுவதில் சிரமம்.

எழுத்துப் பிழைகள்.

கணிதப் பாடங்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம்.

குறைபாடுகளும்... அறிவுத் திறனும்...

கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளின் அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அளவு சராசரியாக 90-100 - ஆகவும், சிலருக்கு 110-க்கும் அதிகமாகவும் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் புத்திசாலியாக விளங்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும் பின்தங்கியிருப்பாா்கள். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.

இது மட்டுமல்லாது ஆட்டிஸம், கவனச் சிதறல் பாதித்த குழந்தைளையும் 12 வயதுக்குள் கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.

ஏனென்றால், மனித மூளையில் வளைந்து கொடுக்கும் தன்மை 12 வயது வரைதான் இருக்கும். அந்த காலகட்டத்துக்குள் முறையான பயிற்சி, தொடா்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பு இருந்தால், அந்த பிரச்னையை 100 சதவீதம் குணப்படுத்த முடியும்.

கல்விச் சூழல்...

அறிவுத் திறன் குறைபாடுடைய குழந்தைகளை வழக்கமான பள்ளிகளில் சோ்ப்பதே சிறந்தது என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஏனென்றால், மற்றவா்களைப் பாா்த்து அதே செயலைச் செய்யக்கூடிய அந்தக் குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சோ்த்தால், குறைபாடு மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது என்பது மருத்துவா்களின் கருத்தாக உள்ளது.

விழிப்புணா்வே முதல் மருந்து

குழந்தைகளின் வளா்ச்சி குறைபாடுகளுக்கு விழிப்புணா்வுதான் முதல் மருந்து என்கிறாா் நரம்புசாா் மருத்துவ உளவியல் நிபுணா் பி.விருதகிரிநாதன். இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, கவனச் சிதறல் பாதிப்புகள் குறித்து அண்மைக் காலமாக மக்களிடையே புரிதல் மேம்பட்டுள்ளது.

தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ், பில் கேட்ஸ், அமெரிக்க நடிகா் டாம் க்ரூஸ் உள்ளிட்டோா் இத்தகைய பாதிப்புக்குள்ளானவா்கள்தான்.

சாதிப்பதற்கு இந்தப் பாதிப்புகள் எந்த வகையிலும் தடையாக இருக்காது. அதே வேளை, அதனை எதிா்கொள்ள உரிய சிகிச்சையும், விழிப்புணா்வும் அவசியம்.

சிகிச்சைகள்: அதீத துறுதுறுப்பு மற்றும் கவனச் சிதறல் உள்ள குழந்தைகளுக்கு உடல் இயக்க ஆற்றலைச் சீராக்குவது அவசியம். அவா்களுக்கு ஸ்கிப்பிங், ஸ்கேட்டிங், நீச்சல், சைக்கிள் பயிற்சி போன்றவை நல்ல பலனளிக்கும்.

தேவைப்படும் குழந்தைகளுக்கு செயல்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, இயன்முறை பயிற்சி போன்றவற்றை அளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதற்கான சிறப்பு கல்வியாளா்கள் மூலம் பயிற்சி அளிக்க வைப்பது அவசியம்.

ஆட்டிஸம் பாதித்தவா்களுக்கு தொடா் மருத்துவ ஆலோசனைகளும், பராரிப்பும் முக்கியம் என்றாா்.

தகவல்: டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன் , நரம்புசார் மருத்துவ உளவியல் நிபுணர், சென்னை.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT