பாக்கெட்டுகளில் பொருள்களை வாங்கி, அதற்குரிய பாட்டில்களில் ரீஃபிள் செய்யும்போது கவனிக்க..
பொதுவாக ஒரே வகையான ஷாம்பு, விளக்கேற்றும் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை பாக்கெட்டுகளாகவும், பாட்டில்களில் அடைத்தும் விற்பனையாகும்.
ஏற்கனவே ஒரு முறை பாட்டில்களில் எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு, பிறகு பாக்கெட்டுகளில் வாங்கி அதனை ஏற்கனவே பயன்படுத்திய பாட்டில்களில் ஊற்றி பயன்படுத்துவது காலம் காலமாக நமது மூதாதையர் முதல் செய்து வந்ததுதான்.
தற்போது, புவியைக் காக்கிறோம் என்ற பெயரில் அந்த முறை மீண்டு வருகிறது.
இதில் மூன்று தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது. ஒன்று, பாட்டில், ஜார், டியூப் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தும் போது, அவை நல்ல நிலையில் மீண்டும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதா என்பதை சோதியுங்கள்.
ஒருவேளை, அதில் ஏதேனும் பூஞ்சை போன்று வளரும் அபாயம் இருந்தால் தூக்கி எறியுங்கள். ஏற்கனவே, அதில் மிச்சம் இருக்கும் பொருளுடன் புதிதாக வாங்கியதை சேர்க்காதீர்கள்.
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவை உரிய முறையில் சுத்தப்படுத்திவிட்டு அதில் புதிய பொருளை அடைக்கலாம்.
தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தி, காயவைத்துவிட்டு பிறகு ரீஃபிள் செய்வது நலம்.
ரீஃபிள் செய்வது உண்மையில் நல்ல நடைமுறைதான் என்றாலும் அதனை சரியாக செய்யாவிட்டால் தவறாகிவிடும். எனவே சரியான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.