வீட்டை சுத்தமாக பராமரிக்க.. ENS
அழகிய இல்லம்

சுத்தமான வீடு அனைவரது கனவு! அது நனவாக நல்ல யோசனைகள்!!

சுத்தமான வீடு அனைவரது கனவாக இருக்கும் நிலையில், அது நனவாக சில நல்ல யோசனைகள்

இணையதளச் செய்திப் பிரிவு

வீட்டை எத்தனைதான் சுத்தம் செய்தாலும், நாம் புழங்கும்போது, அது மீண்டும் அழுக்காகிவிடத்தான் செய்கிறது. எப்போதுமே சுத்தமான வீட்டைப் பராமரிக்க வேண்டும் என்பது அனைவருக்குமே கனவாகவே உள்ளது.

வீடுகளில் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்பவர்களுக்கு என்றால் பரவாயில்லை. நாள்தோறும் வீட்டை சுத்தம் செய்வதையே வேலையாக எல்லோராலும் வைத்துக் கொள்ள முடியாதல்லவா.

எனவே, நம்முடைய வீடுகள் எப்போதும் ஓரளவுக்காவது சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால். சில விஷயங்களை மட்டுமாவது கடைபிடிக்கலாம்.

அதில் ஒரு பத்து விஷயங்களைப் பார்க்கலாம்.

1. கழிப்பறையில் இருக்கும் சிங்கை, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் லேசாகக் கழுவி துடைத்து விடலாம். இது சிங் சீக்கிரம் அழுக்கடைவதைத் தடுக்கும்.

2. ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் அல்லது இரவு உறங்கும் முன்பு தவறாமல் வீட்டை விரைவாகக் கூட்டி எடுத்துவிடுங்கள். இதனை தவறாமல் செய்வது நல்லது.

3. தூங்கி எழுந்ததும் போர்வைகளை சுமாராக மடித்து தலையணையை சரி செய்து அதன் மீது வைத்து விடலாம். அனைரும் தங்களது போர்வைகளை இப்படி மடித்து வைத்துவிட்டாலே போதுமானது.

4. குப்பை கொட்டும் பக்கெட்டில் இன்னும் கொஞ்சம் இடமிருக்கிறதே, நிரம்பட்டும் என்று விட்டு வைக்காமல், குப்பைத் தொட்டி நிரம்புவதற்குள் அதனை காலி செய்து விட வேண்டும். குப்பைத் தொட்டி எப்போதும் நிரம்பியபடி இருக்கக் கூடாது.

5. சாமான்களை தேய்க்கும் சிங்-கை ஒவ்வொரு நாள் இரவிலும் காலி செய்துவிட வேண்டும். அனைத்து சாமான்களையும் தேய்த்து உலர் நிலையில் வைக்க வேண்டும்.

6. அனைத்து அறைகளிலும் கைகளைத் துடைக்க தனியாக டவல் வைத்திருக்க வேண்டும்.

7. காலையில் 10 மணிக்குள் துணிகளை துவைத்து உலர்த்தி விடுவதை வழக்கமாகக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் துவைத்துக் கொள்ளலாம் என விட்டுவிடக் கூடாது.

8. ஒரு இடத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து நகரும் முன்பு, அவ்விடத்தை சரி செய்துவிட்டு கிளம்புங்கள்.

9. சமைத்ததும் சமையலறையை ஒரு முறை சுத்தம் செய்துவிடுங்கள். சிங்க் காலியாக இருக்கும்போது ஒரு சில பாத்திரத்தை அதில் போட்டு வைக்காமல் தேய்த்து வைத்துவிடுங்கள்.

10. நாள்தோறும் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து ஒரு சில மணி நேரம் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் வர வழி செய்யுங்கள்.

A clean home is everyone's dream! Here are some great ideas to make it a reality!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2021 டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி. வீரர் ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

100 நாள்களை நிறைவு செய்த ஆக்‌ஷன் சீரியல்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!

SCROLL FOR NEXT