அழகே அழகு

முதுமையைத் தடுக்க முடியாது ஆனால் தள்ளிப்போட முடியுமா?

தினமணி

சிலர் ஐம்பது வயதிலும் கச்சிதமான உடலுடன் இளமை அழகுடன் ஜொலிப்பார்கள். இன்னும் சிலரோ முப்பது வயதிலேயே ஐம்பது வயதுக்குரிய தோற்றத்தில் காணப்படுவார்கள். ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும் ஏஜிங் என்று சொல்லப்படும் வயதாகும் தன்மை நபருக்கு நபர் மாறுபடும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

நியூஸிலாந்தின் ஒரே நகரைச் சேர்ந்த 954 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் பிறந்தவர்கள். அனைவருடைய உடல் எடை, சிறுநீரகத்தின் செயல்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை பரிசோதித்தனர். 38 வயதான சிலர் உயிரியல்ரீதியாக 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். அவர்களது உயிரியல் வயது, 20-லிருந்து 60 வயது வரை காணப்பட்டது. அவர்கள் லகுத்தன்மை இல்லாமல் உற்சாகமின்றி பெரும்பாலும் சோர்வுடன் இருந்தனர்’ என்று அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெரி மொபிட் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது, சிலருக்கு வயது முதிர்வு ஏற்படுவது நின்றுவிட்டது. ஆனால், வேறு சிலருக்கோ ஒரு வருடம் கழிந்த பின் உயிரியல் ரீதியாக மூன்று வருடங்கள் அதிகரித்தது. வயது முதிர்வதன் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாது என்கிறார்கள் ஆராயச்சியாளர்கள். வயதாவதின் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று இந்த ஆய்வு கூறினாலும் சோகம் மட்டும் அனைவருக்குமானது.

இந்த ஆய்வறிக்கை புரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்ஸஸ் (Proceedings of the National Academy of Sciences) எனும் மருத்துவ ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT