அழகே அழகு

உங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டுமா?

தினமணி

சிலருக்கு முகம் அன்றலர்ந்த தாமரை போல இருக்கும். ஆனால் உதடுகள் பொலிவின்றி கருமையாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதட்டைச் சுற்றி கருமையாக இருக்கும். இத்தகைய கருமை நீங்கி உதடுகள் சிவப்பாகவும் சிறப்பாகவும் தோற்றம் அளிக்க இதோ சில டிப்ஸ்

உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனை கலந்து உதட்டில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். தினமும் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும். பாலாடை மற்றும் நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்

உடலில் பித்தம் அதிகரித்தால் உதடு கருமையாகும் என்கிறது சித்த மருத்துவம். சிலர் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்த நாக்கு நுனியைப் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யக் கூடாது. அது உதட்டின் அழகைக் கெடுத்துவிடும். உதடு வறட்சியடையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதையெல்லாம் மீறி உதடு கருத்தால் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம்

வறண்ட தன்மை நீங்கி ஈரப்பதத்துடன் ஜொலிக்க தினமும் உதட்டின் மேல் சிறிதளவு வெண்ணெயை தடவலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கி மென்மையாகும்.

எலுமிச்சை சாறில் சிறிதளவு மஞ்சள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவவும். தினமும் இதைச் செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

தினமும் இரவு சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளைச் சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் தயிரை உதட்டில் தடவி வாருங்கள். தயிருக்கு பதில் யோகர்ட்டும் தடவலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT