அழகே அழகு

உடல் எடையைக் குறைக்கும் கறிவேப்பிலை!

தினமணி

உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வரும் நிலையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைக் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

பொதுவாக வீட்டில் உணவுப் பொருள்களில் சமையலில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் சாப்பிடும்போது அந்த கறிவேப்பிலையை எடுத்து ஓரமாக வைத்து விடுகின்றனர். இதற்கு பின்னால் உள்ள பலன்கள் குறித்து அவர்கள் அறிவதில்லை. 

அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்க்கப்பட காரணம் அது செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். 

கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எந்த உணவாக இருந்தாலும் எளிதாக செரித்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படாது.

மேலும், வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைகிறது. எனவே, உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்தது சாப்பிடுங்கள்.

இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைகிறது. 

மேலும், கறிவேப்பிலையை ஜூஸ் செய்தும் அருந்தலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்திவர உடல் எடை வெகுவாக குறைந்து வருவதை காண முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT