அழகே அழகு

சருமத்தில் உள்ள கருமையை நீக்க...

தினமணி

வெயில் காலங்களில் சூரியக்கதிர்களின் அதிக தாக்கத்தினால் பலருக்கும் சருமம் கருமையாகி விடுகிறது. என்னதான் சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தினாலும் வெயிலில் சென்றால் சற்று நேரத்தில் முகத்தில் கருமை படர்ந்துவிடும்.

வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்க செயற்கை கிரீம்களை பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதை சரிசெய்ய முடியும். இயற்க்கையான பொருள்களால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

அந்தவகையில் முகம் மட்டுமின்றி உடலில் கருமையாக இருக்கும் பகுதிகளில் எலுமிச்சைச்சாறு தடவி வந்தால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். எலுமிச்சைச் சாறை சில சொட்டுகள் தண்ணீர் கலந்து நேரடியாக பயன்படுத்தலாம். அத்துடன் சிறிதளவு உப்பு கலந்தும் பயன்படுத்தலாம். 

எலுமிச்சைச் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவுடன் சிறிதளவு மஞ்சள், கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். 

கற்றாழை ஜெல் முகத்தின் கருமையை நீக்குவதோடு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் பொலிவையும் கொடுக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து அலசவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT