அழகே அழகு

ஜீன்ஸ் அணியும் பெண்களே.. இது தெரியுமா?

ஜீன்ஸ் அணியும் போது சில கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு

ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப பெண்களின் அழகை ஜீன்ஸ் கூட்டுகிறது. ஜீன்ஸின் மாடல்களும் வகைகளும் புத்தம் புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன. காலங்கள் மாறுவதற்கு ஏற்ப, பழைய மாடல்களும் புதிய டிசைன்களில் வந்துகொண்டிருக்கின்றன.

ஜீன்ஸ் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அவை சரியாக 1873 இல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லெவி ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப் டேவிஸ் என்பவர்கள் ஜீன்ஸ் கண்டுபிடிப்பாளர்கள் என்றும் அறியப்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு ஜீன்ஸ் என்றால் அதிக விருப்பம்தான். சிலர் எந்த மாடலாக இருந்தாலும் அணிந்து தங்களது தோற்றத்தை மெருகேற்றிக்கொள்வார்கள். சிலர் தங்களது உடல் வாகுக்கு ஏற்ப அணிவதும் உண்டு.

அப்படிப்பட்ட ஜீன்ஸ்களில் பல வகைகள் உள்ளன.

'ஸ்கின்னி பிட்' ஸ்டைல் ஜீன்ஸ் தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும்.

'ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட்' என்ற வகை டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும்.

'ரிலாக்ஸ்டு ஃபிட்' வகைகள் வழக்கமான ஜீன்ஸ்களைவிட தளர்வாக இருக்கும். செளகரியமாக உணர வைக்கும். கோடைகாலத்துக்கு ஏற்றவை. சமீபத்தில் இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த வகை ஜீன்ஸ் அனைத்து உடல் வகைகளுக்கும் ஏற்றது.

'பூட்கட் ஜீன்ஸ் ரெட்ரோ' ஜீன்ஸ் சாயலுடன் இருக்கும். இதன் விரிந்த கீழ் பாதி இடுப்பு அளவுடன் சமனாக அமைந்து உயரமாகத் தோன்ற வைக்கும்.

'லோ ரைஸ் ஜீன்ஸ்' வகை ஜீன்ஸ்கள் தொப்புளுக்கு 2 இஞ்ச் கீழே உட்காரும்.

'மிட்-ரைஸ்' ஜீன்ஸானது அனைத்து உடல் வகைகளுக்கும் இது வசதியாக இருக்கும். இது தொப்புளுக்கு சற்று கீழே பொருந்தும். உருவத்துக்கு ஏற்ற வகையில் இது அமைந்துகொள்ளும்.

'ஹை ரைஸ்' வகைகள் தொப்புளுக்கு 2 இஞ்ச் மேலே இது உட்காரும். இடுப்பு வளைவில் பொருந்தி எடுப்பான தோற்றத்தை அளிக்கும்.

கார்கோ வகை ஜீன்ஸ் என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் கொண்ட தளர்வான பேன்ட். முன்பெல்லாம் அவை ஆலிவ் பச்சை அல்லது காக்கி போன்ற வண்ணங்களில் மட்டும் வெளிவந்தன. ஆனால், தற்போது நீலம் , கிரே நிறங்களிலும் வெளி வருகின்றன.

மாம் கட் எனப்படும் ஜீன்ஸ் சற்று நீண்ட மற்றும் சற்று தளர்வான இடுப்பு அளவைக் கொண்டிருக்கும்.

ஜீன்ஸ் அணியும்போது கவனிக்க வேண்டியவை..

ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே, கல்லூரி செல்லும் பெண்கள் வாரம் முழுக்க ஜீன்ஸ் அணியாமல் அவ்வப்போது தளர்வான ஆடைகளையும் அணிவது நல்லது.

அதிக வெப்பமான இடங்களில் பணியாற்றுவோர் அல்லது வெயிலில் அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியவர்கள் ஜீன்ஸ் அணிவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

கால்களை இறுகப் பிடிக்கும் ஜீன்ஸ் ஆடைகளை அணிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துகொண்டு செல்லும்போது, கால்களை மடக்கி அமர்வது கால்களை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மருத்துவரீதியிலான உண்மையாம். அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணியும்போது கால்களை மடக்கி அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டம்

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT