ஃபேஷன்

‘ரிசார்ட் வியர்’ டிசைனர் நிதி முனிமின் புது அவதாரம்!

ஹரிணி

தீபிகா படுகோன், சன்னி லியோன், நர்கீஸ் பஃஹ்ரி உள்ளிட்ட பிரபலங்களைக் கவர்ந்த ரிசார்ட் வியர் டிசைனர் நிதி முனிம், லேட்டஸ்டாக காலணி வடிவமைப்பில் இறங்க உள்ளார். பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான கிராக்ஸுடன் இணைந்து நிதி இனி காலணிகளையும் வடிவமைக்கவிருக்கிறார். முன்னதாக அவர் கிராக்ஸ் நிறுவனத்தின் டிஜிடல் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப் பட்டுள்ளார். அதோடு கிராக்ஸுடன் இணைந்து நேற்று, புதன் அன்று, 2018 ஆம் ஆண்டுக்கான ஸ்பிரிங் சம்மர் கலெக்சன்ஸ் எனும் நிகழ்வில், நடிகையும், மாடலுமான கெளகர் கான் ஷோ டாப்பராக வலம் வர, காலணி வடிவமைப்பில் தனது முதல் ராம்ப் வாக் அறிமுகத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.

காலணி வடிவமைப்பாளர் எனும் தனது இந்த புதிய அவதாரத்தைப் பற்றிப் பேசுகையில் முனிம்; கிராக்ஸுடன் இணைந்த இந்த புதிய அத்யாயம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், காலணி வடிவமைப்பில் இனி அழகான, படு ஸ்டைலான, அணிய விருப்பமுள்ள பல புதுமைகளை தாங்கள் செயல்படுத்தி வருவதாகவும்... இது ஒரு எதிர்பாராத கூட்டணி என்றாலும், காலணி வடிவமைப்பில் மிக அருமையான விளைவுகளைத் தரப்போகும் கூட்டணி இதுவாக இருக்கும் எனத் தான் உணர்வதாகவும் கூறினார்.

புதன் அன்று நடத்தப்பட்ட ராம்ப் வாக்கில் தாங்கள் முன்னதாக அறிமுகப்படுத்திய DIY கிராக்ஸ் கலெக்ஸன்களுடன் காதலை சித்தரிக்கும் வகையிலான காலணிகளை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கவிருப்பதால் எங்களது வடிவமைப்புகளை அணிபவர்களுக்கு அது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது டிசைனிங் அனுபவங்களில் எப்போதும் புதுமையையும், புத்துணர்ச்சியையும் விரும்பும் நிதி முனிம் போன்ற டிசைனருடன் இணைந்து காலணி வடிவமைப்பில் இறங்கியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கிராக்ஸின் இந்திய செயல் இயக்குனர் தீபக் சாப்ரா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT