முகப்பு
ரசிக்க... ருசிக்க...

இந்த மாம்பழ சீஸனில் இதை சாப்பிட்டீர்களா?

மாம்பழத்தின் தோலை சீவிவிட்டு, பாதி மாம்பழத்தைச் சிறு சிறு  துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

மாம்பழ புட்டிங்

தேவையான பொருள்கள்:
பங்கனபள்ளி மாம்பழம் - 1
முந்திரி  - 10
பாதாம் - 4
நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்
பால் - 1 டம்ளர்
பிரஷ் க்ரீம் - 1 தேக்கரண்டி

செய்முறை:  

  • மாம்பழத்தின் தோலை சீவிவிட்டு, பாதி மாம்பழத்தைச் சிறு சிறு  துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும். 
  • பின்னர்  மீதமுள்ள மாம்பழத்தை மிக்ஸியில் இட்டு, அத்துடன் பாதாம், சர்க்கரை  சேர்த்து  பால் விட்டு அடித்துக் கொள்ள வேண்டும்.   
  • ஒரு கிண்ணத்தில் நறுக்கி வைத்துள்ள மாம்பழத்தைப் போட்டு அதன் மீது மிக்ஸியில் அடித்து வைத்துள்ள மாம்பழக்கலவையை ஊற்றி அதன்மீது  முந்திரியைப் பொடித்து தூவவும்.
  • பின்னர்  ஃபிரஷ்  க்ரீமை மேலே லேசாக பரவலாக ஊற்றி பரிமாறவும். 
  • சுவையான மாம்பழ புட்டிங் தயார். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.