செய்திகள்

40 கோடி ரூபாய் ஆடம்பர ஃபிளாட்டை யாருக்காக வாங்கி இருக்கிறார் தீபிகா படுகோன்?!

தனது மனம் கவர்ந்த நபர் ஒருவருக்குப் பரிசளிப்பதற்காக தான் அந்த ஆடம்பர ஃபிளாட்டை தான் வாங்கி இருப்பதாக தீபிகா தெரிவிக்க, அதைத் தொடர்ந்து ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என சிறகடித்துக் கொண்டிருந்த..

கார்த்திகா வாசுதேவன்

சென்னை எக்ஸ்பிரஸ், பாஜிராவ் மஸ்தானி, ராஸலீலா புகழ் தீபிகா படுகோன் கடந்த 2010 ம் வருடம் மும்பையின் காஸ்ட்லி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் மிகவும் ஆடம்பரமான 4 படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை வாங்கி இருந்தார். 26 வது மாடியில் அமைந்த அந்த ஃப்ளாட்டின் விலை சுமார் 36 கோடிகள். அந்த ஃபிளாட்டின் உள் அலங்கார வேலைகள் முடித்து அங்கு குடியேறுவதற்கு முன்பே அந்த வீட்டின் அமைப்பும், குடியிருப்பு வளாகத்தின் வசதிகளும் தீபிகாவை வெகுவாக கவர அதே அபார்ட்மெண்ட்டின் 30 வது மாடியில் முன்னதை விட அதிக விலை கொடுத்து மீண்டும் ஒரு ஆடம்பர ஃபிளாட்டை புக் செய்திருக்கிறார். 

தீபிகா ஃபிளாட் புக் செய்த நொடியிலிருந்து மும்பையில் அதைக் குறித்து கணிசமான வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. தனது மனம் கவர்ந்த நபர் ஒருவருக்குப் பரிசளிப்பதற்காக தான் அந்த ஆடம்பர ஃபிளாட்டை தான் வாங்கி இருப்பதாக தீபிகா தெரிவிக்க, அதைத் தொடர்ந்து ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என சிறகடித்துக் கொண்டிருந்த பாலிவுட்டின் கற்பனைகள் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன.

30 வது மாடியில் 3001 எண்ணுள்ள அந்த ஆடம்பர சொகுசு வீடு வேறு யாருக்கும் அல்ல. சாட்ஷாத் தீபிகாவின் பாசத்துக்கும், நேசத்துக்கும் உரிய அவரது அப்பா பிரகாஷ் படுகோனுக்குத் தானாம்! தனது அப்பாவுக்குப் பரிசளிப்பதற்காகவே தீபிகா அந்த வீட்டை இத்தனை விலை கொடுத்து வாங்கி இருக்கிறாராம்.

மகள் பரிசளிக்கவிருக்கும் அந்த ஃபிளாட்டின் நீச்சல் குளம், வாக்கிங் ஏரியா, ஜிம், பார்க், டென்னிஸ் கோர்ட், போன்ற வசதிகள் ஃபிட்னஸில் எப்போதும் ஆர்வமுடையவரான பிரகாஷ் படுகோனை வெகுவாக ஈர்த்திருப்பதாக அவர் தன் மகளிடம் பாராட்டுதல் தெரிவித்திருக்கிறார். தற்போது அந்த ஃபிளாட்டில் மிச்சமிருக்கும் உள் அலங்கார வேலைகளை முடிந்த பின் பெங்களூருவில் வசித்து வரும் தன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை மும்பையில் தன் வீட்டின் அருகிலேயே குடியமர்த்தப் போவதாக தீபிகா உற்சாகத்துடன் கூறி வருகிறார்.

எது எப்படியோ பெற்றோர் அருகில் இல்லாமல் மும்பையில் தனிமையில் வாடிக்கொண்டிருந்த தீபிகாவுக்குப் பெற்றோரின் அரவணைப்பு கிடைப்பதோடு,  பிரபல டென்னிஸ் வீரரான அப்பா பிரகாஷ் படுகோனுக்கு தன் மகளின் பிரமாண்ட வெற்றிகளை அருகிருந்து ரசிக்கும் வாய்ப்பாகவும் இந்த வீடு அமைந்து விட்டதில் அப்பா, மகள் இருவருக்கும் மகிழ்சியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT