செய்திகள்

டெல்லியில் மேடம் டுஸாட் மியூசியத்தின் கிளை மிக விரைவில்!

சினிமா, இசை, விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகள் செய்து இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் கவனம் ஈர்த்த இந்தியப் பிரபலங்களின் சிலையை வெகு விரைவில் மேடம் டுஸாட் மியூசியத

கார்த்திகா வாசுதேவன்

பிரபலங்களின் மெழுகுச் சிலைகளுக்குப் பெயர் போன மேடம் டுஸாட் மியூசியத்தின் கிளை ஒன்று வெகு விரைவில் நமது தலைநகர் டெல்லியில் திறக்கப் படவுள்ளதாக அதன் தலைமை நிறுவனம் ‘மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்ட்லிருந்து’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லியின் பரபரப்பான இடங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸில் இருக்கும் ரீகல் சினிமா காம்ப்ளெக்ஸின்  இரண்டு தளங்களை முழுவதுமாக எடுத்துக் கொண்டு இந்த மியூசியக் கிளை இயங்கவிருப்பதாக அதன தலமை அதிகாரி ஜான் ஜேகப்ஸன் தெரிவித்தார்.
லண்டன் மேடம் டுஸாட் மியூசியத்தில் இதுவரை இடம் பெற்ற இந்தியப் பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்; இந்த உலகப் புகழ் பெற்ற மெழுகுச் சிலை மியூஸியத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இதில் இடமுண்டு, நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது மெழுகுச் சிலையும் இங்கு உண்டு. இந்த வரிசையில் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்று ஜெயித்தவர்களின் மெழுகுச் சிலைகளை டெல்லியில் இனி திறக்கபட உள்ள மியூசியக் கிளையில் பார்வைக்கு வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  லண்டனைப் போல அல்லாது இந்தியாவில் அங்கே காட்சிக்கு வைக்கப்படும் மெழுகுச் சிலைகளை வெகு அருகாமையில் கண்டு களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
சினிமா, இசை, விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகள் செய்து இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் கவனம் ஈர்த்த இந்தியப் பிரபலங்களின் சிலையை வெகு விரைவில் மேடம் டுஸாட் மியூசியத்தில் காணலாம். காத்திருங்கள் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT