பெங்களூரில் அக்டோ 22 முதல் 30 வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காந்தி புகைப்படங்களின் கண்காட்சி!
கண்காட்சிக்கு திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அக்டோபர் 30 வரை பிற நாட்கள் அனைத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.
செய்திகள்பெங்களூரில் அக்டோ 22 முதல் 30 வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காந்தி புகைப்படங்களின் கண்காட்சி!
கண்காட்சிக்கு திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அக்டோபர் 30 வரை பிற நாட்கள் அனைத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.
மகாத்மாவின் பேரன் கனு காந்தி தனது தாத்தாவும் நமது தேசப் பிதாவுமான காந்திஜியை தனது பல்வேறு புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் அனைத்துமே காந்தி ஆர்வலர்களால் இன்று சரித்திர முக்கியத்துவம் பெற்றவையாக நோக்கப்படுகின்றன. இந்தப் புகைப்படங்களை மையமாக வைத்து பிரபல வரலாற்று ஆசிரியரும் சூழலியல் ஆர்வலருமான ராமச்சந்திர குகா ”காந்தியின் அகப் புகைப்படங்களின் முக்கியத்துவம்”எனும் தலைப்பில் விளக்கமாகப் பேசவிருக்கிறார். காந்தி புகைப்படங்களின் தொகுப்பான இந்தக் கண்காட்சியை இந்திய அரசின் கலைத்துறையின் சார்பில் பெங்களூரு தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியுடன் இணைந்து புது டெல்லி நாசர் ஃபவுண்டேஷன் நடத்தவிருக்கிறது.
கண்காட்சி துவக்கம்: 22.10.2016 மாலை 6 மணி.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தேதி: அக்டோ 22 முதல் 30 வரை
அட்ரஸ்: நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் பெங்களூரு, ஆடிட்டோரியம், 49, மாணிக்ய வேலு மேன்ஷன், பேலஸ் ரோடு, பெங்களூரு.
இந்தக் கண்காட்சிக்கு திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அக்டோபர் 30 வரை பிற நாட்கள் அனைத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு .