செய்திகள்

பிரபாஸ் சொன்ன எடை குறைப்பு டிப்ஸ்!

சரோஜினி

மா டிவியில் ‘பிரேமதோ லக்ஷ்மி’ என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதை நடிகர் மோகன் பாபுவின் மகள் மஞ்சு லக்ஷ்மி தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி, தமிழில் ஸ்டார் விஜயின் ‘காஃபீ வித் டி.டி’ மாதிரியான ஒரு டாக் ஷோ. பிரபலங்களை விருந்தினர்களாக அழைத்து அவர்களிடம் மஞ்சு லக்ஷ்மி கேள்விகள் மூலமாக உரையாடுவார். அப்படி ஒருமுறை அவர் பிரபாஸுடன் உரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ யூ டியூபில் காணக் கிடைத்தது. அதில் ஃபிட்னஸ் குறித்தும், எடை குறைப்பு குறித்தும் பிரபாஸ் அளித்த பதில் எளிமையாக இருந்ததோடு, அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. அவர் சொன்ன ஃபிட்னஸ் டிப்ஸ்களை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.

“உணவு விஷயத்தைப் பொறுத்தவரை; நாக்குக்கு பிடித்த உணவு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது, வயிறு ஒத்துக் கொள்ளக்கூடிய உணவுகளை, நாக்குக்குப் பிடிப்பதில்லை’ இது தான் அடிப்படை. அதை உணர்ந்து எவையெல்லாம் உடல் ஆரோக்யத்துக்கு உகந்த உணவுகள் எனத் தெரிந்து கொண்டு சரிவிகித உணவுப் பழக்கத்தை பின்பற்றினோம் என்றால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.”

என் வீட்டில், அம்மா, அசைவ உணவு வகைகளை மிக அருமையாகச் சமைக்கக் கூடியவர். ருசிக்காக கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டாலும் கூட எனக்கு மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். பிறகு, உண்டதனால் உடலில் ஏற்றிய கொழுப்பைக் சிரமப்பட்டு உடற்பயிற்சிகள் செய்து குறைக்கத் தொடங்குவேன். நாவைக் கட்டுப்படுத்துவது கஷ்டமான விஷயம் தான். ஆனால் நடிகர்களுக்கு ஃபிட்னஸ் என்பது மிக, மிக அத்யாவசியமான விஷயம். அதனால் நான் என் ஃபிட்னஸ் விஷயங்களில் ஆர்வத்துடன் இருப்பேன். அதற்காக ஷூட்டிங் இல்லாத நாட்களில் எல்லாம் ஜிம்மே கதி என்று கிடப்பேன் என்று அர்த்தமில்லை. ஒரு நாளில், முக்கால் மணி நேரத்துக்கு மேல் நான் உடற்பயிற்சிகள் செய்வதில்லை. என்றார்.

உணவு ப்ரியர்களே இது எத்தனை எளிமையான தத்துவம் என்று பாருங்கள், நாக்குக்குப் பிடித்த உணவை வயிறு ஒத்துக் கொள்வதில்லை, வயிறு ஒத்துக் கொள்ளும் உணவை, நாக்குக்குப் பிடிப்பதில்லை. இதை உணர்ந்து கொண்டால் போதும் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT