செய்திகள்

இளம்பெண்களைக் குற்ற உணர்வில் தள்ளும் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரக் கொள்ளைக்கு சரியான பதிலடி!

இந்தியாவைப் பொறுத்த மட்டில் விளம்பரங்களில் அழகான பெண்கள் என்றால் அவர்கள் நிறங்களால் மட்டுமே அளக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் மூளைச் சலவைகளில் ஒன்று

ஹரிணி

நிறத்தை மையமாக வைத்து இந்தியாவில் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடிக்கும் லாபக் கொள்ளையால் நஷ்டம் நமது இயற்கை அழகூட்டிகளுக்கு மட்டுமல்ல. நமது இளம் பெண்களின் தன்னம்பிக்கை உணர்வுகளுக்கும் தான். இந்தியாவைப் பொறுத்த மட்டில் விளம்பரங்களில் அழகான பெண்கள் என்றால் அவர்கள் நிறங்களால் மட்டுமே அளக்கப்பட வேண்டும் என்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் மூளைச் சலவைகளில் ஒன்று. இதை எதிர்த்து சமீபத்தில் ‘பிங்க்’ படப் புகழ் நடிகை டாப்ஸி பன்னு தான் இனிமேல் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடிப்பதாக இல்லை என முடிவெடுத்து அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் சூப்பர் க்வீன் பிரியங்கா சோப்ரா கூட அதே ரீதியில் தமது கருத்து ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு காலத்தில் நான் எனது நிறத்தைக் கொண்டு மிகத் தவறான தாழ்வுணர்வு கொண்டிருந்தேன். அதனால் எனது 20 களில் நான் சில ஃபேர்னஸ் கிரீம் பொருட்களைப் பயன்படுத்தி எனது நிறத்தை அவற்றால் மாற்ற முடியுமா? எனும் சோதனை முயற்சியில் கூட இறங்கி இருக்கிறேன். ஆனால் அவை அனைத்துமே குப்பைகள், அவற்றால் நமது நிறத்தை மாற்ற முடியாதது மட்டுமல்ல சரும ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கும் அவையே காரணம் என அறிந்த பின் அவற்றின் மீதான நம்பிக்கை உடைந்தது. நடிக்க வந்த புதிதில் நான் கூட சில ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் நடித்தேன். ஆனல் இன்று அவை அவசியமற்றவை என்று உணர்ந்ததால் இனி அப்படியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன். உண்மையில் எனது தோலின் நிறத்தை நான் அப்போதும், இப்போதும் ரசிக்கவே செய்கிறேன். என்றிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல நடிகர் அபய் தியோலும் கூட இந்த விளம்பரங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைக் கடுமையாக விமர்சித்து தமது கருத்துகளைப் பதிவிட்டதோடு. இம்மாதிரியான விளம்பரங்களில் நடித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர், நடிகைகளை இவற்றுக்கு எதிராகத் திருப்பி உண்மையை அறியச் செய்ய முயன்றிருக்கிறார். தமிழில் இப்படி தைரியமாக முடிவெடுக்கும் நடிகர், நடிகைகள் எவரேனும் இருந்தால் உத்தமம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முட்டை விலையில் மாற்றமில்லை

பரமத்தி வேலூரில் ரூ. 23 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT