செய்திகள்

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இதையெல்லாம் செய்யாதீங்க!

சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்

DIN
  • சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்.
  • சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போது குடிக்க வேண்டும்.
  • சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. காரணம், குடல் தனது வகையில் செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.
  • குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
  • சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
  • சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
  • சாப்பிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கெனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
  • குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
  • சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்குவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.

- பொ.பாலாஜிகணேஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT