செய்திகள்

உங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? கண்டுபிடிக்க இதோ ஒரு வழிமுறை!

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க

சினேகா

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிபாடாகும். நம்முடைய முன்னோர்களை போற்றி, நினைக்கும் விதமாக அவ்வப்போது அவர்களை தரிசிப்பதே நாம் அவர்களுக்கு காட்டும் நன்றிக்கடனாகும். நல்லெண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்கும், வாழையடி வாழையாக நம் குலத்தை ஆலம் போல தழைக்க வைக்கும். அதற்கு குல தெய்வ வழிபாடு ஒரு சிறப்பான வழி. 

உலகம் முழுவதிலும் உள்ள பெரிய கோவில்களுக்கெல்லாம் சென்று எத்தனையோ தெய்வங்களை நீங்கள் வணங்கி வந்தாலும், உங்கள் குடும்பத்துக்குரிய குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் சிறக்க முடியும் என்பார்கள் பெரியோர்கள்.

பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் குல தெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்திரமும் சாஸ்தா என்றழைக்கப்படும் குடும்ப தெய்வத்தை தரிசிக்க நல்ல நாளாகும்.

குலதெய்வ வழிபாட்டை மறந்துவிட்டால் தீர்க்க முடியாத சிக்கல்களும் மன உளைச்சல்களும் அக்குடும்பத்தை அவ்வப்போது தாக்கும். நம்முடைய குல தெய்வம் எது என்று தெரியவில்லை எனில், பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள முதிய உறவினர் யாரேனும் இத்தகவல் தெரிந்தவராக இருக்கலாம். குல தெய்வம் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. 

தினமும் அதி காலை பிரம்ம முகூர்த்த வேளையில் அகல் விளக்கை ஏற்றி அந்த விளக்கையே குல தெய்வமாக நினைத்து மனமுருக வேண்டுங்கள். தொடர்ந்து 41 நாட்கள் விளக்கேற்றி வழிபாட்டை செய்து வாருங்கள். சரியாக 90 நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT