செய்திகள்

கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான்!

தற்போது கார்த்திகை தீபம் வருகிறது. கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான்.

ஸ்ரீதேவி

'தற்போது கார்த்திகை தீபம் வருகிறது. கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான். மண் அகல் விளக்குகளை நிறைய வாங்கி அதில் கலர் கலராக பெயிண்ட் அடித்து, அதில் டிசைன் செய்து விற்பனை செய்யலாம். நிறைய அகல் விளக்குகளை வட்டமாக வைத்து பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு நடுவில் பிள்ளையார் அல்லது நமக்கு பிடித்தமான டிசைன் செய்து விற்பனை செய்யலாம். மண் குத்துவிளக்கு போல் சிறிதாக கிடைக்கும். அதை சுற்றி அகல் விளக்குகளை ஒட்டிவிட்டால் அது கூட ஒரு டிசைன்தான். அதற்கும் விதவிதமாக வண்ணம் தீட்டினால் நன்றாக இருக்கும். பேப்ரிக் பெயிண்ட் அடித்தாலே போதும். அழகாக இருக்கும் வித்தியாசமாக இருக்கும். அதையே மற்றவர்களுக்கும் விற்பனை செய்யலாம்.

தண்ணீரில் மிதக்கும் விளக்கு: மூங்கில் அல்லது ஐஸ் குச்சிகளை மெலியதாக எடுத்துக் கொள்ளுங்கள். தீக்குச்சி அளவு இருந்தால் போதும். அதை குறுக்கு நெடுக்காக ஒட்டி விடவும். நடுவில் பஞ்சு திரியை பொருத்திவிடுங்கள். இதை விற்பனைக்கு தரலாம்.

செய்முறை: கண்ணாடி கிளாசில் கால் அளவு தண்ணீர், கால் அளவு எண்ணெய்யை அதில் ஊற்றி பிறகு பஞ்சு திரியை அதில் போட்டால் அதில் திரி மிதக்கும். விளக்கு ஏற்றினால் ரொம்ப நேரம் விளக்கு எரியும் பார்ப்பதற்கு வித்தியாசமாக அழகாக இருக்கும்.

ஸ்டோன் விளக்கு: பெரிய பெரிய கலர்கலரான ஸ்டோன் பேன்சி கடைகளில் கிடைக்கும். ஜெர்மன் சில்வரில் அகல்போல் சின்னதாக கிடைக்கும். தெர்மாகோல் அல்லது அட்டையை தேவையான அளவு வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். முதலில் விளக்கை பெவிக்கால் வைத்து அட்டையின் நடுவில் ஒட்டவும். பிறகு அதைச் சுற்றி ஸ்டோன் ஒட்டி விடவும். இதையே இரண்டு அடுக்காக ஒட்டினால் போதும். மிக அழகாக இருக்கும் . வீட்டு வாசலில் நடுவில் வைத்து சுற்றி மண் அகல் விளக்கு வைத்தால் மிக அழகாகவும் மங்களகரமாகவும் இருக்கும்'

- சுய தொழில் ஆலோசகர் உமாராஜ் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT