செய்திகள்

ஸ்மார்ட்ஃபோனில் 16 கேமரா! காப்புரிமை வாங்கிய எல்.ஜி.

16 லென்ஸ்களைக் கொண்ட கேமரா அடங்கிய ஸ்மார்ட்ஃபோனுக்கான காப்புரிமையை பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக எல்.ஜி. பெற்றுள்ளது.

Raghavendran

16 லென்ஸ்களைக் கொண்ட கேமரா அடங்கிய ஸ்மார்ட்ஃபோனுக்கான காப்புரிமையை பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக எல்.ஜி. பெற்றுள்ளது.

ஒவ்வொரு தினமும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் மக்கள் அதிகம் விரும்பும் கேமரா வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் ஒரு கேமரா கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து தற்போது இரு கேமராக்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலானோரின் தேர்வாகவும் இருக்கிறது.

இந்நிலையில், ஒன்றல்லை, இரண்டல்ல, 16 லென்ஸ்கள் அடங்கிய கேமரா வசதி கொண்ட புதிய வகை ஸ்மார்ட்ஃபோன் தயார் செய்யும் திட்டத்தில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக எல்.ஜி. மும்முரம் காட்டி வருகிறது. ஸ்மார்ட் டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் மூலம் பெரும் சந்தையுடன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த எல்.ஜி., தற்போது ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் சில நிறுவனங்கள் 5 முதல் 9 கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்புகளில் இறங்கியுள்ள நிலையில், இந்த 16 கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோனுக்கான காப்புரிமையை எல்.ஜி. பெற்றுள்ளது. இது பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் லைவ் ஃபோட்டோஸ் வசதியைப் போன்று அமையப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT