செய்திகள்

பசுமைத் தீர்ப்பாய பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆயினும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பு எனும் விஷயத்தில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது

RKV

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம்  நிராகரித்தது. அத்துடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்காலத் தடையையும் உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

ஆயினும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பு எனும் விஷயத்தில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு என தனி சட்டம் உள்ளதாகவும். அதை மீறிச் செயல்பட்டதால் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். எனவே பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு உதவாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT