செய்திகள்

சாமி கும்பிடுவது போல நடித்து அம்மன் கிரீடத்தை அலேக்காகத் திருடிச் சென்ற பலே திருடன்! (விடியோ)

RKV

ஹைதராபாத்.. அபிட்ஸ் பகுதியில் இருக்கும் துர்கா பவானி கோயிலுக்குள் புதன்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் ஒரு மனிதன் நுழைந்தான். கோயிலுக்குள் நுழைந்தவன் அங்கு வீற்றிருந்த துர்கை சிலையின் முன் படு சின்சியராக விழுந்து கும்பிட்டான். வெறும் கும்பிடு அல்ல.. காதைப் பற்றிக் கொண்டு தோப்புக்கரணம், முன்னும், பின்னுமாக பூமி போல தன்னைத்தானே சுற்றிக் கொண்டு தன்னை யாராவது கவனிக்கிறார்களா? என்று திருட்டுப் பார்வை வேறு பார்த்துக் கொண்டான். இத்தனையும் எதற்கு என்கிறீர்கள்? துர்கையின் சிரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த கிரீடத்தை லவட்டிக் கொண்டு செல்லத்தான்.

கொள்ளை முயற்சியில் ‘எப்படியாவது வெற்றியைத் தா தெய்வமே!’ என்று இடையிடையே வேண்டுதல் வேறு! சரியான திருடன் தான் அவன்! இப்படியும், அப்படியுமாக முயன்று கடைசியில் எப்படியோ கிரீடத்தை களவாடியாயிற்று. அந்த நேரத்தில் அதாவது அந்தத் திருடன் இத்தனை ஜாலக்காக கிரீடத்தை அபேஸ் செய்யும் வரை அங்கு பூசாரியைக் காணோம். பிறகு மீண்டும் தன்னை யாராவது பார்க்கிறார்களோ என்ரு நோட்டம் விட்ட திருடன் கிரீடத்தைத் தனது சட்டையின் உட்புறத்தில் நுழைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து நைஸாக வெளியேறி சடுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி சிட்டாகப் பறந்து விடுகிறான். இத்தனையையும் யாரும் பார்க்கவில்லை என்று நம்பித்தான் அவன் தப்பி ஓடி இருக்கிறான். ஆனால்,  அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யை அவன் கவனிக்கத் தவறியது தான் இப்போது வினையாகி இருக்கிறது.

அம்மனின் கிரீடத்தைத் திருடிச் சென்ற திருடனைப் பிடிக்கும் வரை தர்ணாவில் ஈடுபடுவோம் என்று அங்கிருந்த பக்தர்கள் கிளர்ச்சி செய்யவே இப்போது அந்த பலே திருடனைப் பிடிக்க ஹைதராபாத் போலீஸார்  கடுமையாக முயன்று வருகிறார்கள்.

திருடன் கவர்ந்து சென்ற கிரீடம் 35 தோலா எடை கொண்டது, அடன் மதிப்பு ரூ10,000 என்கிறார்கள்.

அம்மன் கிரீடத்தைத் திருடிச் சென்ற பலே திருடனைப் பிடிக்க ஹைதராபாத் போலீஸார் இப்போது அபிட்ஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு தெரு விடாமல் வலை விரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்களாம்.

திருட்டில் இதென்ன பக்திமார்க்கத் திருட்டோ! அடக்கடவுளே! உனக்கே இந்தக் கதி தானா?!

Video Courtesy: The most watched videos ON YOUTUBE.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT