முகப்பு
செய்திகள்

சருமப் பாதுகாப்பிற்கு தேங்காய் எண்ணெய்!

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி தேக ஆரோக்கியத்துக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த பொருள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
கோப்புப்படம்
பகிர்:

தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அதிகம் நிறைந்திருப்பதால் அதனை பயன்படுத்தக்கூடாது என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால் தேங்காய் எண்ணெயில் 90% நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு நல்ல பலனையேத் தருகிறது என்பதுதான் உண்மை. எனவே, சமையலில் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெயும் சேர்த்து பயன்படுத்துவது உடல்நலனுக்கு நல்லது. 

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி தேக ஆரோக்கியத்துக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த பொருள். குறிப்பாக பெண்களுக்கு சருமம் கருப்படைவது போன்ற நேரத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

'பாடி லோஷன்' என்று சொல்லப்படும் சருமத்திற்கு பயன்படுத்தும் திரவங்களைவிட பன்மடங்கு பயன் தருவது தேங்காய் எண்ணெய். குளிர்காலம் ஆனாலும், வெயில் காலம் ஆனாலும், சருமம் பாதுகாப்பாக இருக்க உதவும். 

வெளியே செல்லும்போது தேங்காய் எண்ணெயை தேவைக்கேற்ப எடுத்து முகம், கைகள், கால்களில் தடவிவிட்டு செல்லுங்கள். வெயில், குளிரிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஒரு திரை போன்று இது செயல்படுகிறது. 

மேலும் முகச் சுருக்கம், முகப்பருக்களை போக்க, முதுமையைத் தடுக்க சருமத்திற்கு தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். 

வெயிலில் செல்லும்போது வைட்டமின் டி-யை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. எனவே, சருமத்தை பாதுகாக்க செயற்கை திரவங்களைத் தவிர்த்து இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →