கோப்புப்படம் 
செய்திகள்

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. 

DIN

உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒருங்கே கொடுக்கக்கூடிய பொருள்களில் ஒன்று கேரட். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. 

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கேரட்டை முழுமையாக சாப்பிடுவது உடல் சூட்டைத் தனிப்பதுடன் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். உடல் சோர்வைக் குறைக்கும். கலோரி குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்கும். 

தோல் பாதுகாப்பிற்கு கேரட் சிறந்த மருந்து. கேரட்டை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பழச்சாறு செய்து அருந்தலாம். 

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் உடலுக்கு தேவையான எனர்ஜியினை கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கேரட் சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்து குடிக்கலாம். இதிலுள்ள பீட்டா கரோட்டின் உடல் கொழுப்பைக் குறைக்கிறது.

வயிற்றுப் புண், குடல் புண்ணை குணமாக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்றை சுத்தமாகும். 

சருமம் பொலிவு பெறுவதுடன் தோல் சுருக்கங்கள் நீங்கும். 

மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகக் கோளாறுகளுக்கு கேரட் ஜூஸ் சிறந்த மருந்து. இதை நோய்கள் வருவதைத் தடுக்கிறது. 

எனவே உடல் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெற தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

கூலி வெற்றிபெற ரஜினி போஸ்டர்களுடன் திருச்சி விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு!

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT