உதடு வறட்சியைத் தடுக்கும் எளிய வழிகள்!
குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படுவது பொதுவாக நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான். ஆனால், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படுவது பொதுவாக நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான். ஆனால், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதற்கும், உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதற்கும் இதுவே காரணம்.
உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம். உதட்டில் வறட்சி ஏற்பட்டால் நாக்கால் உதடுகளை ஈரமாக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்துவிடுங்கள். இதனால் உதடு மேலும் வறட்சியாகுமே தவற அதனை சரிசெய்ய முடியாது. மாறாக, நாக்கில் உள்ள பாக்டீரியாக்கள் உதடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்தவகையில், உதடு வறட்சியைப் போக்கும் சில வழிகளைக் காணலாம்.
முதலில் உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.
பின்னர் உதடு வறட்சியைத் தடுக்கும் கீழ்குறிப்பிட்ட பொருள்களை உதட்டின் மீது தடவிவர வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும்.
• தேங்காய் எண்ணெய்
• பாதாம் எண்ணெய்
• கற்றாழை ஜெல்
• வெள்ளரிக்காய்
• வெண்ணெய்
• ஆரஞ்சு, எலுமிச்சை தோல்
இவற்றில் ஏதேனும் ஒன்றை உதட்டின் மீது தொடர்ந்து தடவிவர விரைவில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.