முகப்பு
செய்திகள்

மார்பக புற்றுநோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கலாமா?

மயக்க மருந்து எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோய் உள்ளவர்களிடையே மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:43 PM
பகிர்:

மயக்க மருந்து எடுத்துக்கொள்வது மார்பக புற்றுநோய் உள்ளவர்களிடையே மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால், மயக்க மருந்து அடிக்கடி எடுத்துக்கொள்வது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், மார்பக புற்றுநோய் ஆரம்ப(மெட்டாஸ்டேசிஸ்) நிலையில் உள்ளவர்கள் மயக்க மருந்து எடுத்துக்கொள்வது புற்றுநோய் செல்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மயக்க மருந்து நமது உடலில் உள்ள சைட்டோகைன் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமாக மார்பக புற்றுநோயின் மெட்டாஸ்டேடிக் செயல்முறையை மாற்றக்கூடும்.

ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மெத்தில் ஐசோபிரைபில் - செவோஃப்ளூரேன்(methyl isopropyl - sevoflurane) மயக்க மருந்து அதிக மெட்டாஸ்டேடிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கிறது என்பதை பல்வேறு கட்ட ஆய்வின் மூலமாக அவர்கள் கண்டறிந்தனர்.

எனவே, மார்பக புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளிகளின் தன்மைக்கு ஏற்பவும், நோயின் வீரியத்தைப் பொறுத்தும் மயக்க மருந்துகளை மருத்துவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →