காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்?
காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்? இதற்கு சிங்கிள்ஸ் அளித்த பதில் என்னவாக இருக்கும்?
காதலர் தினம் இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, காதலர்கள் அதனை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். பிப்.7 முதல் பிப். 14 வரை கொண்டாடப்படும் 'காதலர்கள் வாரம்' வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது.
வழக்கமான நாட்களிலேயே பொது இடங்களில் ஜோடியாக சுற்றும் மனிதப் புறாக்கள் காதலர் தினத்தன்று சொல்லவே தேவையில்லை. வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ்-இல் ஆரம்பித்து டேட்டிங் வரையில் ஒரே கொண்டாட்டம்தான். சரி, இந்த நாளில் சிங்கிள்ஸ் என்ன செய்வார்கள்? இதற்கு சிங்கிள்ஸ் அளித்த பதில் என்னவாக இருக்கும்? பார்க்கலாம்.
தில்லியைச் சேர்ந்த அபிமன்யு கட்வால் என்பவர் 32 வயதாகும் ஒரு இளைஞர், பத்திரிகையாளர். வழக்கமாக அந்த நாளில் வெளியில் செல்வதை தவிர்த்து விடுவேன், வீட்டில் இருந்து டிவி பார்ப்பது, யூ ட்யூப்பில் விடியோ பார்ப்பது, புத்தகம் படிப்பதில் செலவிடுவேன் என்று கூறுகிறார்.
Advertisement
பெயர் குறிப்பிட விரும்பாத 32 வயது புகைப்படக் கலைஞர் ஒருவர், அன்பை வெளிப்படுத்த குறிப்பிட்ட நாள் ஏதும் தேவையில்லை என்றும் அன்றைய தினம் வழக்கம்போல எனது அன்றாட வேலைகளை கவனிப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஒருவர் தனது பைக் பழுதுபார்க்கும் வேலையை செய்யவிருப்பதாகவும் மாலை தனது நண்பர்களுடன் வழக்கம்போல ஹோட்டலுக்குச் செல்வேன் என்றார்.
24 வயதான இளம் எழுத்தாளர் அங்கூர் சிங் கூறுகையில், 'இது ஒரு சாதாரண நாளாகத்தான் இருக்கும். மற்றவர்களின் செய்கைகளை பார்த்து ரசிப்பேன். அந்நாளில் என்னை மகிழ்விக்கும் நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் காத்திருக்கிறது' என்று கிண்டலுடன் கூறினார்.
கட்வால் என்பவர், காதலர் தினத்தில் டிவி பார்ப்பதையும் சமூக ஊடகங்களில் நேரம் செலவழிப்பதை விரும்புவதாகக் கூறினார். சிங்கிள்ஸாக இருப்பதை நினைத்து வருந்துவதை விட சந்தோஷமாக சில மீம்ஸ்களை உருவாக்குங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
சிங்கிளாக இருந்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் எந்தவொரு வெறுமையையும் ஒருபோதும் உணரவில்லை என்று கூறும் இளைஞர் ஒருவர் தனிமை ஒரு இனிமையான நிறைவான அனுபவம். நமது குறிக்கோள்களில் கவனம் செலுத்த வைக்கிறது. நமக்கென்ன நிறைய நேரம் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்களுக்கு நேர்மையாக இருக்க முடிகிறது. பிடித்த நண்பர்களுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தனியாக இருப்பதனால்தான் நம்மை நாமே உணர முடிகிறது என்று சிங்கிள்ஸ்-களுக்கு ஒரு வகுப்பே எடுத்துவிட்டார்.
கடந்தகால உறவுகளின் நினைவுகளை திரும்பி பார்க்கவும், அனுபவிக்கவும் உதவுவதாக வயதான சிங்கிள் ஒருவர் தெரிவித்தார்.
எனவே, காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ், உங்களது நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்..