கோப்புப்படம் 
செய்திகள்

தலைமுடி பராமரிப்பில் செய்யக்கூடாதவை

முடி உதிர்தலைத் தடுக்க நாம் பல்வேறு முறைகளை மேற்கொண்டாலும் முடி பராமரிப்பின்மை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

DIN

முடி உதிர்தலைத் தடுக்க நாம் பல்வேறு முறைகளை மேற்கொண்டாலும், முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கும் முடி பராமரிப்பின்மை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தலைமுடியை பராமரிக்கும் முறை தெரியாமல்தான் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது. 

தலைமுடி பராமரிப்பில் செய்யக்கூடாதவை

► தலைக்கு குளித்தவுடன் தலையை துண்டால் இறுக்கக் கட்டக்கூடாது. சுத்தமான இலகுவான காட்டன் துணியை பயன்படுத்துவது நல்லது. தலைமுடிக்கு அழுத்தம் கொடுக்காமல் மிகவும் சாதாரணமாக உலர்த்த வேண்டும். 

► தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பால் தலை வாரக்கூடாது. நன்கு உலர்த்திய பின்னரே தலைமுடியை சீவ வேண்டும். 

► சீப்புகளில் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தாமல் மரத்தால் ஆன சீப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இதனால் முடி வெப்பமடைந்து உதிர்வது தடுக்கப்படும். 

► தலைமுடியில் சிக்கல் இருந்தால் அதனை அவ்வப்போது வாரிவிடுவது நல்லது. சிக்கலை வைத்துகொண்டே இருந்தால் மிகப்பெரிய முடி உதிர்வுக்கு அது வழிவகுக்கும். 

► தலையில் எண்ணெய் பதம் இருப்பது அவசியம். காலையில் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாதவர்கள் இரவில் வைத்துவிட்டு காலையில் தலைக்கு குளித்துவிட்டுச் செல்லலாம். 

► முடிந்தவரை 'ப்ரீ ஹேர்' விடுவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறான சூழ்நிலைகளில் மாசு அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்க்கலாம். 

► இரவில் படுக்கப்போகும் முன் தலைமுடியின் மேலிருந்து கீழ் வரை சீவி பின்னி விட்டு படுத்தல் நன்று. இதனால் சுருள் முடி கூட சிறிது நேராக வாய்ப்புண்டு.

► தலையணையை அழுக்கின்றி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

SCROLL FOR NEXT