முகப்பு
செய்திகள்

ரூ. 20 கோடிக்கு ஏலம்: உலக சாதனை நிகழ்த்திய வைர மோதிரம்!

ஜெனிவாவில் அரிய ஊதா-சிவப்பு நிற வைரம் ஒன்று ஏலத்தில் 2.77 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
அரிய ஊதா-சிவப்பு நிற வைரம்
பகிர்:

ஜெனிவாவில் அரிய ஊதா-சிவப்பு நிற வைரம் ஒன்று ஏலத்தில் 2.77 மில்லியன் டாலருக்கு (20.63 கோடி ரூபாய்) விற்கப்பட்டது. 

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் 1.05 காரட் அரிய செவ்வக வடிவ ஆடம்பர வைர மோதிரம் உலகளாவிய சாதனை நிகழ்த்தியுள்ளது. ஒரு பிளாட்டினம் மற்றும் தங்க வளையத்தில் இரண்டு இதய வடிவ வைரக் கல் வைக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக சிவப்பு நிற வைரங்கள் அரிதானவை என்பதால் எப்போது விலை சற்று அதிகமாக இருக்கும். சிவப்பு வைரங்களுக்கு வண்ணத்தைக் கொண்டுவருவதற்கான காரணம் நீண்ட காலமாக விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது. வைரத்தின் கட்டமைப்பில் இருக்கும் அணுக்களே இதற்குக் காரணம் என்று ரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர். 

ஒரு வைரம் அதன் உருவாக்கத்தின் போது மிகப்பெரிய அளவிலான அழுத்தத்திற்கு உட்படுகிறது. மேலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தை வழங்க அதன் அணு அமைப்பை மாற்றப்படுகிறது.

விஎஸ் 2 தெளிவுடன் 1.05 காரட் ஆடம்பர ஊதா-சிவப்பு வைரத்தை துபாயைச் சேர்ந்த இந்தியர் ஆஷிஷ் விஜய் ஜெயினுக்குச் சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ளது. தியாரா ஜெம்ஸ் மற்றும் டிஎம்சிசி ஜூவல்லரி இதனை 2.77 மில்லியன் டாலர் (20.63 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது. 

இதுகுறித்து ஆஷிஷ் விஜய் கூறும்போது, 'நகைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் போட்டித்தன்மையுடையது. வாடிக்கையாளர்களின் உணர்வுகளை உணர்ந்து உருவாக்க வேண்டும். கரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் சரிவடைந்த நிலையிலும், மக்கள் மத்தியில் அரிய கற்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். இம்மாதிரியான முயற்சிகள் முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பாகும்' என்றார். 

ஜெனீவாவில் கிறிஸ்டி நிறுவன ஏலத்தில் எப்போதும் வரலாற்று சிறப்பு மிக்க, வித்தியாசமான, நவீன நகைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →