முகப்பு
செய்திகள்

உடல் வறட்சியைத் தடுக்கும் நல்லெண்ணெய்!

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
கோப்புப்படம்
பகிர்:

வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்று நகரமயமாக்கல் வாழ்க்கையில் மறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால், கரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளின் காரணமாக மக்கள் இன்று இயற்கை உணவு முறைகளை நோக்கித் திரும்புகின்றனர். அந்த வகையில் நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

►  நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்த உதவும். முகப்பருக்கள் மறையும். சரும வறட்சியைத் தடுக்கும். 

► நல்லெண்ணெய்- ரோஸ் வாட்டர் அல்லது நல்லெண்ணெய்-எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும வறட்சி நீங்கும். இதனை ஒரு பாட்டிலில் அடைத்து ஸ்பிரே போன்றும் பயன்படுத்தி வரலாம். 

► உதடு வெடிப்பு, உதடு வறட்சிக்கும் நல்லெண்ணெயைத் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும். 

► மேக் அப் ரிமூவராக நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால் சருமம் பாதுகாப்பாக இருக்கும். 

► சருமம் கருமையாவதைத் தடுக்கும் நல்லெண்ணெய், தலைமுடி உதிர்வு, தலைமுடி வறட்சியை சரிசெய்ய உதவும். 

► வாரத்திற்கு ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெயால் மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளித்து விடுங்கள். இப்படி செய்தால் உடல் சோர்வு என்பதே இருக்காது. 

► கண்களில் கருவளையம் இருந்தால் இரவில் படுக்கும்முன் நல்லெண்ணெயை தடவி விட்டு உறங்கச் செல்லுங்கள். இதனால் தூக்கம் நன்றாக வருவதோடு விரைவில் கருவளையமும் மறைந்துவிடும். 

முழு கட்டுரையைப் படிக்க →