முகப்பு
செய்திகள்

உடல் பருமனால் ஏற்படும் 8 முக்கியப் பிரச்னைகள்!

உடல் பருமன் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான உடலியல் பிரச்னை. நவீன உணவு பழக்கவழக்கங்களால் பலரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:

உடல் பருமன் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான உடலியல் பிரச்னை. நவீன உணவு பழக்கவழக்கங்களால் பலரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 40% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் உழைப்பு குறைவதாலும் சத்தற்ற உணவுகளை உண்பதாலும் உடல் பருமன் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன் காரணமாக எழும் உடல்நலப் பிரச்னைகள் இதயம், மூளை, நுரையீரல், எலும்புகள், மூட்டுகள், இரத்த நாளங்கள், பித்தப்பை உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும். சத்தான உணவுகளை மட்டும் உண்டு உடல் எடையைக் குறைப்பதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம். 

இந்நிலையில் உடல் பருமனால் வரும் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வேண்டும். 

Advertisement

டைப் -2 நீரிழிவு நோய்

பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகம். அதிகப்படியான கொழுப்பு உடலின் இயற்கையான வளர்சிதை மாற்ற செயல்பாட்டை சீர்குலைத்து இன்சுலின் சுரப்பைக் குறைக்கும். இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு உள்ளவர்கள் குறிப்பாக டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம்

கூடுதல் எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக எடை கொண்டவர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும்.

மாரடைப்பு

உயர் ரத்த அழுத்தம், அதிகரித்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் கொண்ட, பருமனானவர்களுக்கு இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்படும். விரைவில் மாரடைப்பு ஏற்படவும் வழிவகுக்கும். 

ஸ்லீப் அப்னியா

கழுத்து பகுதியில் கொழுப்பு படிந்து காற்றுப்பாதைகளைத் தடுக்கும் நிலைக்கு ஸ்லீப் அப்னியா என்று பெயர். இதனால் தூக்கத்தின்போது சுவாசிப்பது தடைபடும். ஒருகட்டத்திற்கு மேல்  சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறும். உடல் பருமனால் இந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கல்லீரல் நோய்

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவது அதன் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். இது கல்லீரல் செயலிழப்பை சேதப்படுத்தும்.

பித்தப்பை

உடல் பருமன் கொண்டவர்களுக்கு பித்தப்பை கற்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சந்தர்ப்பங்களில், இவற்றைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.

சிறுநீரக செயலிழப்பு

நீங்கள் உடல் பருமனாக இருக்கும்போது, ​​சிறுநீரகங்கள் அதிக சுமையாக இருக்கும். மேலும் கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் அதிகம் வேலை செய்யும். இதனால் சிறுநீரக தொடர்பான கோளாறுகள் ஏற்படும். 

கருவுறாமை

அதிகப்படியான கொழுப்பு கர்ப்பத்தில் சிக்கல்களை உருவாக்கும். கர்ப்பம் தரிப்பதை கடினமாக்கும்.

உடல் எடையை குறைக்கும் வழிகள்:

நீங்கள் மிகவும் பருமனாக இருக்கும்போது, ​​திடீரென தீவிரமான பயிற்சியில் ஈடுபட வேண்டாம். இது அதிக தீங்கினை விளைவிக்கும். எடையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் மருத்துவர்களின் உதவியை நாடுவது அவசியம்.

பல ஆண்டுகளாக உணவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் உடல் பருமன் இணை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது மற்றும் ஆயுட்காலத்தை குறைக்கிறது. இவர்கள் முறையாக சத்தான உணவுகளை உண்ணுங்கள். சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மருத்துவரை தொடர்ந்து அணுகி உடல் எடை குறைப்புக்கு முயற்சி செய்யுங்கள். அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். சிவப்பு இறைச்சி மற்றும் பிற கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும். உணவு எடுத்துக்கொள்வது குறித்து ஊட்டச்சத்து நிபுணரின் உதவியைப் பெறுங்கள். 

இவையனைத்தும் பயன்தராத பட்சத்தில் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது டைப் -2 நீரிழிவு, இருதய ஆரோக்கியம் மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடைய ஸ்லீப் அப்னியா, மூட்டு வலி, மனச்சோர்வு மற்றும் கருவுறுதலை மேம்படுத்துகிறது. நீண்டகால உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது பாதுகாப்பான, சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள தீர்வு என்று கூறப்படுகிறது. இயற்கையாக உடல் பருமனை குறைக்க முடியாதவர்கள் மட்டும் மருத்துவர்களின் உதவியுடன் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments