உரிமையாளருடன் நாய்க்குட்டி 
செய்திகள்

உரிமையாளருக்காக மருத்துவமனைக்கு வெளியே பல நாள்களாக காத்திருந்த நாய்க்குட்டி!

உரிமையாளர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே ஒரு நாய் பல நாள்களாக காத்திருந்தது. 

DIN

மனிதர்களுக்கும் அவற்றின் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்தவகையில் துருக்கியில் ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே ஒரு நாய் பல நாள்களாக காத்திருந்தது. 

செமல் சென்டர்க் என்பவரின் நாய்க்குட்டி போன்கக் என்ற நாய்க்குட்டி, உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து நாய்க்குட்டி வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது. 

சென்டர்க்கின் குடும்பத்தினர் நாய்க்குட்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்றபோதிலும் மீண்டும் மீண்டும் மருத்துவமனை வாசலுக்கு வந்துவிடும். பல நாள்களாக காலை முதல் மாலை வரை மருத்துவமனை வாயிலில் இருந்த நாய்க்குட்டி தற்போது உரிமையாளரை பார்த்துவிட்டது. உரிமையாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து அவரும் நாய்க்குட்டியும் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. உரிமையாளரின் சக்கர நாற்காலியின் முன்னும் பின்னுமாக ஓடி, சென்டர்க் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT