விரைவில் ’ப்யூஜி' புதிய கேமரா அறிமுகம் 
செய்திகள்

விரைவில் ’ப்யூஜி' புதிய கேமரா அறிமுகம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான ‘ப்யூஜிபில்ம்’ தன்னுடைய புதிய தயாரிப்பான ’மிர்ரர் லெஸ்’ கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

தினமணி

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான ‘ப்யூஜிபில்ம்’ தன்னுடைய புதிய தயாரிப்பான ’மிர்ரர் லெஸ்’ கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

‘ப்யூஜிபில்ம் ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேமரா மிகத் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் கோஜி வாதா , ‘ ப்யூஜிபில்ம் நிறுவனம் ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2 கேமராவை உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நிச்சயமாக உலகப் புகைப்பட வரலாற்றில் மைல்கல்லாக இது அமையும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.3,79,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ப்யூஜிபில்ம்​ ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2 சிறப்பம்சங்கள்:

* 51.4 எம்பி லார்ஜ் ஃபார்மட் சென்சார்
* 900 கிராம் எடை
*குறைந்த ஒளியிலும் துல்லியத்துடன் பதிவு செய்யும் லென்ஸ் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

SCROLL FOR NEXT