கோப்புப்படம் 
செய்திகள்

ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி: ஆய்வில் தகவல்

ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்க முடியும் என்றும் வாசிப்புத் திறனை வளர்க்க முடியும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

DIN

ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்க முடியும் என்றும் வாசிப்புத் திறனை வளர்க்க முடியும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

குழந்தை பிறந்து ஒரு 2-3 வயதில் இன்று பள்ளிகளில் சேர்க்கிறார்கள். எழுத்துகள் முதல் வாசிப்பு வரை அடிப்படையாக குழந்தைகள், பள்ளிகளில் தான் கற்றுக்கொள்கிறார்கள். 

ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகள் கூட அடிப்படைக் கல்வியை ஆன்லைன் மூலமாக கற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. ஒரு குழந்தைக்கான தேவை அல்லது விருப்பத்தின் அடிப்படையில் இது சாத்தியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'ஃபிரன்டியர்ஸ் இன் ஹியூமன் நியூரோ சயின்ஸ்' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

'குழந்தைகள் 5 வயதில் கற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், இந்த தொற்றுநோய் குழந்தைகளை நேரில் பள்ளிகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பைப் பறித்துவிட்டது. சமூகத்தில் கற்றலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வாசிப்பு பயிற்சிகள் உதவிகரமாக உள்ளன. வேறு வழியின்றி குழந்தைகள் இங்கு இது கற்றல் தளமாக மாறிவிடுகிறது. எங்கிருந்து வேண்டுமானாலும் பயிலலாம் என்பதால் அவர்களுக்கு மிகவும்  வசதியாக இருக்கிறது' என்று ஆய்வாளர் பாட்ரிசியா குல் தெரிவித்தார்.

ஒரு மொழியில் உள்ள தனித்துவமான ஒலிகளை அறிந்துகொள்வது, எழுத்துகளைப் படிப்பது, சொற்களை அறிந்துகொள்வது என குழந்தையின் முதல் கற்றலையும் ஆன்லைன் மூலமாக தெளிவாக வழங்க முடியும் என்பது தங்கள் ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT