செய்திகள்

உடல் எடையைக் குறைக்கும் இலவங்கப்பட்டை!

DIN

இலவங்கப்பட்டை... பிரியாணி, குருமா ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு பொருள். உண்மையில் இதன் பயன் என்னவென்று தெரியுமா?

இலவங்கப்பட்டையில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை உள்ளது. 

உடலில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

மாரடைப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம்.

இதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கும். இதயத் தசைகளை வலுவடையச் செய்கின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கும்.

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும். 

ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளையும் சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. 

வயிற்றுக்கோளாறுகளையும் சரிசெய்யும். 

எப்படி பயன்படுத்தலாம்? 

இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் அருந்தி வரலாம். 

தேநீரில் இலவங்கப்பட்டை போட்டு குடிப்பதும் நல்ல பலனைத் தரும். 

நாட்டு மருந்து கடைகளில் இலவங்கப்பட்டை பொடி கிடைக்கும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT