செய்திகள்

பாடி லோஷன் பயன்படுத்துவது நல்லதா?

DIN

பாடி லோஷன்... சரும வறட்சிக்காகவும் சருமப் பாதுகாப்பிற்காகவும் இன்று ஆண், பெண் என இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

பாடி லோஷனைப் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தை மிருதுவக்குகிறது. மேலும் சருமத்திற்கு வாசனையைத் தருகிறது. இதனால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க முடியும். முழங்கை போன்ற கருமையான பகுதிகளில் தடவும்போது கருமை படிப்படியாகக் குறைகிறது. இறுதியாக சருமத்தை பொலிவடையச் செய்கிறது. 

கவனிக்க வேண்டியவை

♦ உடல் முழுவதுமே சிலர் பாடி லோஷனை பயன்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் குறிப்பாக, சூரிய ஒளி படும் முகம், கழுத்து, கை, கால்களில் தடவ வேண்டியது அவசியம். 

♦ அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் அவசியம் பயன்படுத்துங்கள். 

♦ மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களைப் பயன்படுத்த வேண்டும். 

♦ எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம். 

♦ அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள். 

♦ குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும். 

♦ முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும். 

♦ கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள். 

நல்லதா? 

பாடி லோஷன் சருமத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தருகிறது. சருமப் பராமரிப்பில் முக்கியமானது என்று கூறலாம். எனினும், சிலருக்கு, சில பாடி லோஷன் தயாரிப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ரசாயனம் அதிகம் கலக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய்யைக்கூட பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT