செய்திகள்

சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே பேஷியல் செய்யலாம்!

மாறி வரும் அன்றாடப் பழக்கங்களால் சருமப் பிரச்னைகள் அதிகரிப்பதும் அதனை சரிசெய்ய அழகு நிலையங்கள், சிகிச்சைகள் என்று செல்வதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது.

DIN

மாறி வரும் அன்றாடப் பழக்கங்களால் சருமப் பிரச்னைகள் அதிகரிப்பதும் அதனை சரிசெய்ய அழகு நிலையங்கள், சிகிச்சைகள் என்று செல்வதும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆனால், வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு இதனை எளிதாக படிப்படியாக சரிசெய்ய முடியும். 

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். உடலுக்கு நீரேற்றம் அளிக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும். 

வெளிப்புற அழகு பராமரிப்பு என்றால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பழங்களைக் கொண்டு பேஷியல் செய்யலாம். 

பப்பாளி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடலாம். பழத்தை நன்றாக மசித்து அப்படியே பயன்படுத்தலாம். 

அல்லது மிக்சியில் போட்டு அரைத்தோ முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். ஒரு 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவிவிடுங்கள். இதனை தொடர்ந்து செய்துவர சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயைப் பயன்படுத்துங்கள். வெள்ளரிக்காய் பேஸ்ட்டை கண்களை சுற்றி அப்ளை செய்யலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் வைக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

திண்டுக்கல்லில் பலத்த மழை

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

SCROLL FOR NEXT