செய்திகள்

சோயா சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள் மீல் மேக்கர் எனப்படும் சோயா துண்டுகள் ஆகும். இதில் புரதசத்து அதிகம் உள்ளது.

DIN

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள் மீல் மேக்கர் எனப்படும் சோயா துண்டுகள் ஆகும். இதில் புரதசத்து அதிகம் உள்ளது.

பொதுவாக சைவ உணவு உண்பவர்கள் சோயா துண்டுகளை (மீல் மேக்கர்) பிரியானி, குழம்பில் பயன்படுத்துகின்றனர். சோயா துண்டுகளை இறைச்சிக்கு பதிலாக பெரும்பாலானோர் உணவில் பயன்படுத்துகின்றனர்.

சைவ உணவை உட்கொள்பவர்களுக்கு, சோயா சந்தேகத்திற்கு இடமின்றி அதிக அளவு புரதத்தை வழங்குகிறது.  மேலும், சோயாவில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது ஒரு முழுமையான புரத ஆதாரமாக அமைகிறது. 

புரதத்தின் அசைவ உணவுடன் ஒப்பிடும் போது, சோயாவில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது என கூறப்படுகிறது. இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் ஐசோஃப்ளேவோன்களைக் கொண்டுள்ளது. மேலும், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

சோயா துண்டுகளில் குறைந்த அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில தாதுக்கள் உள்ளன.

சோயா துண்டுகளில் உள்ள தீமைகள் என்னவென்றால், சோயா துண்டு பதப்படுத்தப்பட்ட பொருளாகும். எனவே இதில் சேர்க்கப்பட்ட உப்பு மற்றும் எண்ணெய் ஊட்டச்சத்து மதிப்பை சிறிது குறைக்கிறது மற்றும் அதிகமாக உட்கொள்ளும் போது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல எனவும் கூறப்படுகிறது.

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் உண்ணாமல் இருப்பது நல்லது. சோயாவில் ஈஸ்ட்ரோஜனும் அதிகமாக உள்ளதால், இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். 

குறிப்பாக ஆண்கள் உணவில் சோயா துண்டுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT