கோப்புப்படம் 
செய்திகள்

கண் இமைகளின் முடி உதிர்கிறதா? அடர்த்தியாக வளர டிப்ஸ் இதோ!!

கண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் கண் இமைகளில் உள்ள முடிகள் சிலருக்கு உதிரும். அதன் அடர்த்தி குறைந்தால் கண்களின் அழகே கெட்டுவிடும்.

DIN

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்கள் அழகாகத் தெரிய பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்கள் கண் மை பயன்படுத்தி வந்துள்ளனர். 

இன்று நவீனமாக கண்களுக்கு, காஜல், மஸ்காரா, ஐ ஷேடோ என பல அழகுப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கண்களை புத்துணர்ச்சியாக்க அழகு சிகிச்சைகளும் வந்துவிட்டன. 

இந்நிலையில் கண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் கண் இமைகளில் உள்ள முடிகள் சிலருக்கு உதிரலாம். அதன் அடர்த்தி குறைந்தால் கண்களின் அழகே கெட்டுவிடும். முக்கிய நிகழ்வின்போது மேக்அப் செய்யும்பொது சிலர் தனியாக கண்ணுக்கு ஐ-லேஷஸை செயற்கையாக வைத்துக்கொள்கின்றனர்.

தோல் புற்றுநோய், மரபணு உள்ளிட்டவை கண் இமை முடிகள் உதிர்வதற்கு காரணங்களாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு இயற்கையாகவே கண் இமைகள் உதிரும்பட்சத்தில் வீட்டில் உள்ள சில பொருள்களைக் கொண்டு இமை முடிகள் உதிர்வதைத் தடுக்கவும் அடர்த்தியாக வளர வைக்கவும் முடியும்.

► அடர்த்திமிக்க ஆமணக்கு எண்ணெயை கண் இமை முடிகளின் மீது தடவும்போது முடி அடர்த்தியாக வளரும். ஆமணக்கு எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கண் இமை முடிகளுக்கு பயன்படுத்தும் பிரஷ் கொண்டு தடவுங்கள். 

►  ஆமணக்கு எண்ணெய் வாசனை பிடிக்காதவர்கள் வெறுமனே தேங்காய் எண்ணெய்யை மட்டும் தடவலாம்.

►  பலவீனமான கண் இமை முடிகளுக்கு மற்றொரு இயற்கை தீர்வு ஆலிவ் எண்ணெய். முடிகள் உதிர்வதைத் தடுத்து அழகாக மாற்ற உதவும். ஆலிவ் எண்ணெயில் பருத்தியை நனைத்து, கண் இமை முடிகள் மீது கவனமாக தடவவும். 

►  க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே இது கண் இமை முடிகள் வேகமாக வளர உதவுகிறது. மேலும் கருவளையங்களை குறைக்கிறது. சூடான நீரில் க்ரீன் டீ இலைகளைப் போட்டு அந்த நீரை கண் இமை முடிகளில் தடவலாம். 

► சரும அழகுக்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி கற்றாழை பெரிதும் பயன்படும் ஒரு பொருள். சிறிது கற்றாழை ஜெல்லை உங்கள் கண் இமை முடிகளில் தடவி ஐந்து நிமிடம் உலர விட்டு பின்னர் அலசவும். இது ஜெல் என்பதால் போடும்போது கண்களை மூடிக்கொள்வது நல்லது. ஜெல் கண்களுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT