செய்திகள்

குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!

உங்கள் குழந்தைகளின் உடல்நலன் முக்கியம் என்றால் அவர்களுக்கு வளரும் வயதில் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும், குறிப்பாக இந்த 10 உணவுகளைக் கொடுக்கக்கூடாது. 

DIN

குழந்தைகள் வளர்ப்பில் அவர்களுக்கு கொடுக்கும் உணவுகள் என்பது முக்கியமானது. ஆனால் இன்றைய குழந்தைகள் காய்கறி, பழங்கள் என ஊட்டச்சத்துள்ள பொருள்களைத் தவிர்த்து பீட்சா, பர்கர் என சத்தில்லாத உணவுகளையே சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு கெடும் ஒருபக்கம் இருக்கிறது. 

ஆனால், குழந்தைகளுக்கு இந்த உணவுகளைக் கொடுத்து பழக்கம் வைப்பதற்கு தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், சக குழந்தைகள் என்று காரணம் இருந்தாலும் பெற்றோரும் முக்கியக் காரணம்.

உங்கள் குழந்தைகளின் உடல்நலன் முக்கியம் என்றால் அவர்களுக்கு வளரும் வயதில் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். குறிப்பாக கீழ்க்குறிப்பிட்ட உணவுகளை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்!

சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்கள்  - இது உடல் எடையை அதிகரிக்கும், பற்கள் சொத்தையாகும். 

பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் - இதுவும் பற்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

ஸ்நாக்ஸ் - சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் குழந்தையின் உடலில் உப்புச் சத்து மற்றும் கொழுப்பை அதிகரிக்கும். 

பிரென்ச் பிரைஸ், பிரைடு சிக்கன் போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவுகள் தேவையற்ற கொழுப்புகளை உடலில் சேர்க்கும். 

'ஃபாஸ்ட் ஃபுட்' எனும் பொருந்தா உணவுகள் - இதில் பெரும்பாலாக எந்த ஊட்டச்சத்தும் இல்லாததால் உடல் எடையைத்தான் அதிகரிக்கும். 

'ட்ரான்ஸ் ஃபேட்' எனும் நிறைவுறா கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

காஃபின் அதிகமுள்ள பானங்கள், உணவுகளையம் குழந்தைகளுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 

செயற்கை இனிப்புகள் கலந்த டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்காதீர்கள். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி - இதில் சோடியம் அதிகம் இருப்பதால் அழற்சி ஏற்படலாம். 

சமைக்காத உணவுகள் - வேகவைக்காத முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் கொடுக்கக்கூடாது. சமைக்காத உணவில் உள்ள பாக்டீரியா மூலமாக நோய்கள் பரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டிலிருந்து வேலை! பென்சில் பேக்கிங் மோசடி நடப்பது எப்படி?

வெளி மாவட்ட மீனவர்களை சிறைப்பிடித்த கோடியக்கரை மீனவர்கள்!

காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் முதற்கட்ட நடவடிக்கை!

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT