செய்திகள்

லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா?

DIN


சுருள் பட்டை என்றால், மரத்தின் தோல் பகுதி, பிரிஞ்சி இலை என்றால் கேட்கவே வேண்டாம்.. இலை, என்பதுபோல லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா?

நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்கும். லவங்கம் என்ற சாக்லேட் நிறத்தில் இருக்கும் வாசனைப் பொருள், ஒரு செடியின் மொட்டுப் பகுதி. மிக அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் பூ மலர்வதற்குள் மொட்டாக இருக்கும் போதே அவை பறிக்கப்பட்டு, லவங்கமாக மாற்றப்படுகிறது.

இது வெறும் வாசனை நிறைந்தது. பிரியாணிக்கு வாசனையைக் கூட்டும் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன.

ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருந்தாலும், அதனை பலரும் நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், அதன் பலன்களைப் பார்த்தால், நிச்சயம் மனம் மாறலாம் என்று கருதப்படுகிறது.

அதாவது, லவங்கத்தில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் காரணமாக, வெளியிலிருந்து உடலைத்தாக்கும் கதிர்களிடமிருந்து உடலுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது.

உடலுக்குத் தேவையான அழற்சி நீக்கியாகவும் லவங்கம் திகழ்கிறது. தொடர்ந்து லவங்கத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குறையும்.

வாய் சுகாதாரத்துக்கு லவங்கம் மிகச்சிறந்தது. பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக இருக்கும். வாய்க்குள் மிக மோசமான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டால் அதனை நீக்க உதவுகிறது. 

செரிமாணத்துக்கும் உதவுகிறது. செரிமாணக் கோளாறு, வயிற்று எரிச்சல், வாயுத் தொந்தரவுகளைக் குறைக்கிறது. செரிமாணத்துக்குத் தேவையான நொதிகளை அதிகரிக்கிறது.


ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.  நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT