செய்திகள்

நம்பிக்கையும் உண்மையும்: பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிடலாமா?

DIN

உடல் பருமன் மற்றும் உடலில் பல்வேறு பிரச்னைகள்  காரணமாக இன்று பலரும் பல டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். எனினும் சாப்பிடுவதில், டயட் முறையில் பலருக்கும் சந்தேகம் என்பது இருந்துகொண்டுதானிருக்கிறது. 

அந்த வகையில் சத்தான உணவுகள், டயட் முறைகள் குறித்த சில தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை உணவியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி பஜாஜ். 

1. விலையுயர்ந்த பேக் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை

உணவுப் பொருட்களின் விலையை பொருத்து அது ஆரோக்கியமானது அல்லது ஆரோக்கியமற்றது என கூற முடியாது. ஒரு சில விலையுயர்ந்த பேக்கிங் உணவுகள் தீவிரமாக பதப்படுத்தப்பட்டவை . மேலும் அவை அதிக நிறைவுற்ற கொழுப்பு உப்புகள், சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. 

2. கொழுப்பு இல்லாத உணவைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது

உலக சுகாதார அமைப்பின் உணவுப் பழக்கவழக்க வழிகாட்டுதல் மற்றும் உணவு முறை குறிப்புகளின்படி, ஆரோக்கியமான ஒரு நபர் எடுத்துக்கொள்ளும் உணவில் மொத்த கலோரிகளில் 20% முதல் 35% வரை கொழுப்பு இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. கொழுப்பும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, சத்தான உணவுத் திட்டத்தின் முக்கிய ஒரு பகுதியாக கொழுப்பு இருக்க வேண்டும். 

3. குளுட்டன் ஃப்ரீ டயட் நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும்

(குளுட்டன் அல்லது புரோலமின் என்பது புரோட்டீன்களின் தொகுப்பு. இது கோதுமை, பார்லி , கம்பு, ஓட்ஸ் போன்றவற்றில் உள்ளது.)

குளுட்டன் உள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதால் அழற்சி(செலியாக் நோய்) ஏற்பட்டால் கண்டிப்பாக அந்த பொருள்களைச் சாப்பிடுவது சரியல்ல. மேலும் குளுட்டன் ஃப்ரீ டயட் என்பது கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்காது. 

4. பழங்களை உணவோடு சேர்த்து சாப்பிடுவது சிறந்தது

உணவுக்குப் பதிலாக பழங்கள் சாப்பிடுவது, உணவுக்கு முன் பழங்களை சாப்பிடுவது, உணவுடன் சேர்த்து சாப்பிடுவது.. இவை அனைத்துமே ஆரோக்கியமானதுதான்.

நீரிழிவு நோயாளிகள் உடல்நிலை சரியில்லை என்றாலோ உடல் செயல்பாடுகளற்று இருந்தாலோ உணவையும் பழங்களையும் இரண்டு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

5. ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்த நீரிழிவு நோயாளிகள் தனிப்பட்ட டயட் முறையை எடுத்துக்கொள்ள வேண்டும்

சத்தான உணவுகளைச் சாப்பிடுவது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே ஆரோக்கியமானதுதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT