செய்திகள்

இதயத்துக்காக தினமும் 50 படிகள் ஏறினால் போதும்!

இதயத்தின் ஆரோக்கியத்துக்காக நாள்தோறும் வெறும் 50 படிகட்டுகள் ஏறினால் போதும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

இணையதளச் செய்திப் பிரிவு


இதயத்தின் ஆரோக்கியத்துக்காக நாள்தோறும் வெறும் 50 படிக்கட்டுகள் ஏறினால் போதும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

நமது ஆரோக்கியத்தையும் இதயத்தையும் காக்க வேண்டுமெனில், சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பகிர்வதைப் போல நாள்தோறும் 10 ஆயிரம் நடைகள் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லையாம்.

அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்துள்ள துலேன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாள்தோறும் மறக்காமல் 50 படிகட்டுகள் ஏறி இறங்கினாலே இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும் என்ற நல்ல தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையில், நாள்தோறும் 50 படிக்கட்டுகளை தொடர்ச்சியாக ஏறினாலே, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் 20 சதவீதம் குறைந்துவிடுமாம். 

ரத்தக் குழாய் அடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுடன் பெருந்தமனி தடிப்பு நோய் (ஏஎஸ்சிவிடி) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணியாக உள்ளது. 

சற்று உயரம் கொண்ட படிக்கட்டுகளில் ஏறும் குறுகிய கால கடும்பயிற்சியானது இதய செயல்பாட்டுக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த வழியாகும். இது, இதய ஆரோக்கியத்துக்காக தற்போதைய வழிகாட்டுதல்களை பின்பற்ற முடியாதவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்  என்று துலேன் பல்கலைக்கழக பொது சுகாதாரம் மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மருத்துவப் பள்ளியில் பேராசிரியர் உதவி ஆராய்ச்சியாளர் டாக்டர் லு கி தெரிவித்திருப்பது, படிகட்டுகளில் ஏறுவதன் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் சுயவிவரத் தரவுகளிலிருந்து 4,50,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி அவர்களது குடும்ப வரலாறு, மரபணு ரீதியான ஆபத்து காரணிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இதய நோய்க்கு ஏற்படும் விகிதம் கணக்கிடப்பட்டது. இதில், பங்கேற்பாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் படிக்கட்டுகளில் ஏறும் முறை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT