செய்திகள்

நம்பிக்கையும் உண்மையும்: புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? பரவக்கூடியதா?

DIN

புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? அனைத்து புற்றுநோய்களுக்கும் ஒரே சிகிச்சை முறையா? புற்றுநோய் பரவக் கூடியதா?? ஆல்கஹால் புற்றுநோய்க்கு காரணமாகுமா?

புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா. 

புற்றுநோயை குணப்படுத்த முடியாது

அனைத்து புற்றுநோய்களும் வெவ்வேறானவை. ஏன், ஒரே புற்றுநோயின் வெவ்வேறு நிலைகள்கூட வெவ்வேறு கணிப்புகளைக் கொண்டுள்ளன. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் பெரும்பாலாக அனைத்து புற்றுநோய்களும் குணப்படுத்தக்கூடியவை. புற்றுநோயின்  ஆரம்ப நிலைகளுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் புற்றுநோய் முற்றினால் இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி சிகிச்சையளிக்க முடியாது. இங்கு வழங்கப்படும் புற்றுநோய் சிகிச்சை முறைகள் உலகின் சிறந்த சேவைகளுக்கு இணையாக உள்ளன.

அனைத்து புற்றுநோய்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை

ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை, கீமோதெரபி, இம்யூனோதெரபி ஆகிய முறைகளில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை வரிசை என்பது, புற்றுநோயின் இடத்தைப் பொருத்து மட்டுமின்றி வேறு சில காரணிகளும் இருக்கின்றன. கீமோதெரபி, கதிர்வீச்சு முறை உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் மூலமாக எளிதாக சிகிச்சை அளிக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். அனைத்து புற்றுநோய் சிகிச்சைகளும் முடி உதிர்தலுடன் தொடர்புடையவை அல்ல, அது ஏற்பட்டாலும் சரியாகக் கூடியது. 

புகையிலை மருத்துவ குணம் கொண்டது, இது புற்றுநோயை ஏற்படுத்தாது 

புகையிலை ஆற்றலை அதிகரிக்கிறது, புத்துணர்வைத் தருகிறது, மலச்சிக்கலை நீக்குகிறது. இது பல் வலியை, வாய் புண்களைக் குணப்படுத்தாது,

அதுபோல, புகையிலை புற்றுநோயை உண்டாக்கும். அது குட்கா, சிகரெட், பீடி, இ-சிகரெட், வேப்பிங், ஹக்கா என எந்த வடிவமாகவும் இருக்கலாம். 

சிறுநீர்ப்பை, ரத்தம், கருப்பை, பெருங்குடல், மலக்குடல், உணவுக்குழாய், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், மூச்சுக்குழாய், கணையம், வயிறு, வாய் மற்றும் தொண்டை ஆகியவற்றின் புற்றுநோய்களுக்கு புகையிலை காரணமாக இருக்கிறது. பெரும்பாலாக அனைத்து புற்றுநோய்களுக்கும் புகையிலை மறைமுகமாக காரணமாக இருக்கிறது.

குறைவாக அருந்தினால் மது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது

அனைத்து வகையான மதுபானங்களும் எந்த அளவில் எடுத்துக்கொண்டாலும் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அனைத்து புற்றுநோய்களிலும் ஆல்கஹால் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு கொண்டுள்ளது. 

மார்பகம், கல்லீரல், வாய், தொண்டை (தொண்டை மற்றும் குரல்வளை), உணவுக்குழாய், குடல் புற்றுநோய்களின் அபாயத்தை ஆல்கஹால் அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. 

பயாப்ஸி மற்றும் எப்என்ஏசி, புற்றுநோய் பரவுவதற்கு காரணமாகிறது

பயாப்ஸி மற்றும் ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி(எப்என்ஏசி) முறைகள் புற்றுநோயை உறுதிப்படுத்துவதற்கு உதவும் சோதனை முறைகள். 

புற்றுநோயைக் கண்டறிந்து உறுதிப்படுத்துவதற்கு திசுக்கள் (histological) அல்லது செல்(cytological)களின் அடிப்படையில் ஆதாரம் இருப்பது அவசியம். இதில் பயாப்ஸி எனும் உயிரியல் பரிசோதனை, எந்த திசுக்களில் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. எப்என்ஏசி என்பது செல்களில் புற்றுநோயின் நிலையை அறிய உதவுகிறது. 

அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட கதிரியக்க ஸ்கேன் முறைகள் மற்றும் பிஇடி(PET) ஸ்கேன் புற்றுநோயின் வீரியத்தை மட்டுமே கண்டறியும். 

புற்றுநோய் கட்டிகள் வலி அதிகம் கொண்டவை 

உடலில் ஏற்படும் அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் அல்ல. இருப்பினும், கட்டி ஏற்பட்டால் அவற்றை உடனே பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்ப கால புற்றுநோய் கட்டிகள் வலி தருபவை. நரம்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவுவதன் எதிரொலிதான் அந்த வலி. எனவே, ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். 

புற்றுநோய் பரவக்கூடிய தொற்று

உடலுறவு, முத்தம் கொடுப்பது, தொடுதல், உணவைப் பகிர்ந்துகொள்வது அல்லது ஒரே காற்றை சுவாசிப்பது போன்ற நெருங்கிய தொடர்புகள் புற்றுநோயைப் பறப்பது. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமுள்ள புற்றுநோய் செல்கள், மற்றொரு ஆரோக்கியமான நபரின் உடலில் வாழ முடியாது. ரத்தத்தின் மூலமாக புற்றுநோய் பரவும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. சில புற்றுநோய்கள் சில வைரஸ்கள், பாக்டீரியாக்களால் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும் அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்!

5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா

ஸ்டார் வசூல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாத மேலுமொரு ஆஸி. வீரர்!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT