முகப்பு
செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் புரொஃபைல் பிக்சர் தெரியவில்லையா?

உங்கள் வாட்ஸ்ஆப்பில் ஒருவருடைய புரொஃபைல் பிக்சர் தெரியவில்லையா?

Updated On : 13 ஏப்ரல் 2024, 2:41 pm IST
இனி வாட்ஸ்ஆப்பில் வியு ஒன்ஸ் தகவல்களை ஸ்கிரீன்ஷாட்டும் எடுக்க முடியாது
பகிர்:

உங்கள் வாட்ஸ்ஆப்பில், ஒருவரது புரொஃபைல் பிக்சர் தெரியவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முன்பெல்லாம் ஒரு காரணம்தான் இருக்கும், அவர் புரொஃபைல் பிக்சர் வைத்திருக்க மாட்டார்.

ஆனால், தற்போது கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட தகவல்கள் உள்ளன. ஒருவரது புரொஃபைல் பிக்சர் மற்றொருவருக்குத் தெரியாமல் போவதற்கு.

பயனர்களின் பயன்பாட்டுக்காக வாட்ஸ்ஆப் செயலி தொடர்ந்து பல புதிய வசதிகளை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது.

Advertisement

Advertisement

அதில் புதிதாக வந்த பல வசதிகளை பலரும் அறியாமலேயே கூட இருப்போம். சிலது மிகவும் பழமையானபிறகே நமக்குத் தெரிய வருவதும் உண்டு.

அதாவது, ஒருவரது புரொஃபைல் பிக்சர் தெரியாமல் இருக்க, அவர், செட்டிங்ஸில், நோபடி என்ற ஆப்ஷனை தேர்வு செய்திருக்கலாம். அதாவது யாருக்குமே தனது புரொஃபைல் பிக்சர் தெரியாது. அதில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

உங்கள் தொலைபேசி எண் அவரிடம் இருக்காது

உங்கள செல்ஃபோன் எண் அவரிடம் இல்லாமல் இருந்தாலும், அவர் உங்கள் எண்ணை சேமிக்காமல் இருந்தாலும் அவரது புரொஃபைல் பிக்சர் உங்களுக்குக் காட்டாது.

உங்களது எண் நீக்கப்பட்டிருக்கலாம்

ஒருவேளை ஏற்கனவே உங்களது எண் சேமிக்கப்பட்டு, வேறு ஏதோ காரணத்தால் அந்த எண் நீக்கப்பட்டிருந்தாலும் உங்களுக்கு புரொஃபைல் பிக்சர் காட்டாது.

சிலருக்கு மட்டும் மறுப்பு

ஒருவேளை, எனது செல்ஃபோனில் எண் சேமிக்கப்பட்டிருந்தாலும், சிலர், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புரொஃபைல் பிக்சரைக் காட்ட வேண்டாம் என்று மறைக்கலாம். அதாவது மை கான்டாக்ட்ஸ் எக்ஸப்ட் என்ற வாய்ப்பை பயன்படுத்தலாம்.

உங்கள் எண் பிளாக் செய்யப்பட்டிருந்தால்

ஒருவேளை, உங்கள் எண் பிளாக் செய்யப்பட்டிருந்தால், அவரது புரொஃபைல் பிக்சர் உங்களுக்கு காட்டப்படாது. அவரது ஸ்டேட்டஸ் கூட உங்களுக்குத் தெரியாது.

சில வேளைகளில், ஒரு மாற்றத்துக்காக ஒருவர் புரொஃபைல் போட்டோ வைக்க வேண்டாம் என்று நீக்கியிருக்கலாம்.

சிலர், புதிய எண் வாங்கும் போது வாட்ஸ்ஆப் கணக்கை மாற்றுவதற்காக பழைய எண்ணிலிருக்கும் வாட்ஸ்ஆப் கணக்கை அகற்றியிருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.