முகப்பு
வணிகம்

இனி இந்த செல்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! முழு விவரம்...

ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்துக்கு குறைவான போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 5:05 PM
இந்த செல்லிடப்பேசிகளில் ஜன.1 முதல் வாட்ஸ்அப் இயங்காது
பகிர்:

ஆண்ட்ராய்டு 6.0 -க்கு குறைவான இயங்குதளம் கொண்ட செல்போன்களில் வருகின்ற செப்டம்பர் 8 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது.

டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் சாதனங்கள், செயலிகள் மற்றும் மென்பொருள்களும் அதே வேகத்தில் பரிணமித்து வருகின்றது.

புதிய தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயலிகள் மேம்படுத்தப்பட்டு வரும் சூழலில், பழைய செல்போன்களுக்கும் அவை ஈடுகொடுக்கும் வகையில் கூடுதல் கவனத்துடன் உருவாக்க வேண்டியது சவாலான ஒன்றாக இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 8 முதல், ஆண்ட்ராய்டு 6.0-க்கு முந்தைய பதிப்பு இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் செயல்பாடுகளை நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேம்பட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், புதிதாக வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள அம்சங்களுக்கு மேம்பட்ட இயங்குதளம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்டு போன்கள் வருகின்ற செப். 8 முதல் வாட்ஸ்ஆப் செயலியை அணுகும் வசதியை இழக்கும்.

ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்டு போன்கள் உபயோகிப்பவர்களின் வாட்ஸ்ஆப் செயலியில் இதுதொடர்பான அறிவிப்புகள் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயனர்கள் தங்களின் தரவுகளை காப்புப் பிரதி (பேக்கப்) எடுத்து கூகிள் டிரைவு போன்றவற்றில் சேமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பயனர்கள் வேறு செல்போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, தங்களின் தரவுகளை மீட்டெடுக்க முடியும்.

இந்த நடவடிக்கை மூலம், இந்தியா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பழைய வகை ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் குறைந்த அளவிலான பயனர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

summary

WhatsApp Will No Longer Work on These Mobile Phones! Full Details...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.